Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dandruff Problems: பொடுகு தொல்லையா..? எண்ணெய் தேய்த்தும் பலன் இல்லையா? சில டிப்ஸ் இதோ!

Winter Dandruff Reduce Tips: பொடுகு பிரச்சனையை சரிசெய்வதற்கு தேங்காய் எண்ணெய் உடனடியாக சரிசெய்யும்.இருப்பினும், இதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். அதன்படி, தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. இதுவரை நீங்கள் எண்ணெய் தடவும் முறை தவறாக இருக்கலாம்.

Dandruff Problems: பொடுகு தொல்லையா..? எண்ணெய் தேய்த்தும் பலன் இல்லையா? சில டிப்ஸ் இதோ!
பொடுகு தொல்லையை சரிசெய்யும் முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Dec 2025 19:37 PM IST

குளிர்காலம் (Winter) வந்தவுடன் பலரும் தலையில் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்காக கடைகள் மற்றும் ஆன்லைன்களில் கிடைக்கும் எண்ணற்ற ஷாம்புகள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு பதிலாக, முடி உதிரத் தொடங்குகிறது. கிடைக்கும் ஷாம்புகளை எல்லாம் பயன்படுத்தும்போது உச்சந்தலை வறண்டு போகும். இது நாளடைவில் பொடுகு பிரச்சனை (Dandruff) வர வழிவகுக்கும். பொடுகு பிரச்சனையை சரிசெய்வதற்கு தேங்காய் எண்ணெய் உடனடியாக சரிசெய்யும்.இருப்பினும், இதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். அதன்படி, தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. இதுவரை நீங்கள் எண்ணெய் தடவும் முறை தவறாக இருக்கலாம். எனவே, நாங்கள் சொல்லும் இந்த முறையை பின்பற்றினால், இது விரைவாக வேலை செய்யும்.

ALSO READ: ஒரு வெள்ளை முடியை பிடுங்கினால் மற்றொன்று வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

சரியான முறையில் எண்ணெய் எப்படி தடவுவது?

  • ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அதில் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து கொதிக்க விடவும். இலைகள் நன்றாக  பொரிந்து எண்ணெயுடன் நன்கு கலக்கவிடுங்கள். இதன் பிறகு, இந்த எண்ணெயை நன்றாக வடிகட்டி, முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே விடவும். ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ஷாம்பூவைப் பயன்படுத்தி நன்றாக தலையை அலசவும். இப்படி வாரத்திற்கு 2 முறை தலையில் தடவலாம். இது பொடுகை நீக்கி, உங்கள் தலைமுடி வேகமாக வளர உதவி செய்யும்.
  • இது உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், சில கறிவேப்பிலைகளை அரைத்து எடுக்கவும். கறிவேப்பிலை பேஸ்டில் தயிர் கலந்து, இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி, கைகளால் மெதுவாக மசாஜ் செய்யவும். 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு ஷாம்பூ போட்டு கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை கறிவேப்பிலை – தயிர் பேஸ்ட் தடவினால் பொடுகு தொல்லை நீங்கி, முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
  • தேங்காய் எண்ணெயுடன் பாதி அளவிலான எலுமிச்சை சாற்றை கலந்து, இதை தலைமுடியை அலசுவதற்கு முன் தலையில் போட்டு மசாஜ் செய்யலாம். இதுவும் பொடுகை நீக்கி, தலைமுடியை நன்கு ஈரப்பதமாக்கும்.
  • நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஷாம்பூவுடன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து வாரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்து உங்கள் தலைமுடியை அலசலாம்.

ALSO READ: மழைக்காலத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இந்த வழிமுறைகள் செய்தால் போதும்!

இது எதுவும் உதவவில்லை என்றால், நீங்கள் ஒரு மருத்துவரை சந்தித்து சரியான முறையில் தீர்வை பெறலாம்.