Hair Fall: முடி உதிர்தலை தடுக்கும் கற்றாழை.. தலைக்கு எப்படி பயன்படுத்துவது? மருத்துவர் சஹானா விளக்கம்!
Aloe Vera Benefits For Hair: கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளன. இவை நம் தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். கற்றாழையில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். கற்றாழையை முடி மற்றும் உச்சந்தலையில் இதைப் பயன்படுத்துவது முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகுத் தொல்லையையும் நீக்குகிறது.
முடி உதிர்தல் பிரச்சனை (Hair Fall) ஒவ்வொரு பருவத்திலும் ஒரு பிரச்சனையாகும். ஆனால், இது குளிர்காலத்தில் இது அதிகரிக்கிறது. முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த, பெண்கள் முதல் ஆண்கள் வரை பலவிதமான அழகுசாதனப் பொருட்களை கடைகள் மற்றும் ஆன்லைன்களில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, பல்வேறு வீட்டு சமையலறை பொருட்களையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், இவை எதுவும் பெரியளவில் பலன்களை தருவதில்லை. இந்த குளிர்காலத்தில் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த கற்றாழை (Aloe Vera) பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.
கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளன. இவை நம் தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். கற்றாழையில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். கற்றாழையை முடி மற்றும் உச்சந்தலையில் இதைப் பயன்படுத்துவது முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகுத் தொல்லையையும் நீக்குகிறது. மேலும், கற்றாழை உச்சந்தலையை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அந்தவகையில், முடி உதிர்தலுக்கு கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர் சஹானா வெங்கடேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




ALSO READ: பொடுகு தொல்லையா..? எண்ணெய் தேய்த்தும் பலன் இல்லையா? சில டிப்ஸ் இதோ!
கற்றாழையை எப்படி தடவுவது..?
View this post on Instagram
- முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் கலந்து தூங்க செல்வதற்குமுன் உங்கள் தலைமுடியில் தடவவும். எண்ணெயை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவவும். அப்படி இல்லையென்றால், ஷாம்பு போட்டு குளிக்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும் தலைமுடியில் தடவலாம்.
- வெங்காய சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து தலைமுடியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு அலசவும்.
- கற்றாழை ஜெல்லை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து, 2 மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியைக் கழுவவும். இது உங்கள் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
ALSO READ: குளிர்காலத்தில் தலைக்கு எத்தனை நாட்கள் ஷாம்பூ போடலாம்..? இது முடிக்கு ஆரோக்கியமானதா?
- கற்றாழை ஜெல்லை எலுமிச்சை சாறுடன் கலந்து உங்கள் உச்சந்தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்து தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு மூன்று முறை இதைப் பயன்படுத்துவது பொடுகை போக்க உதவும். பொடுகை ஏற்படுத்தும் உச்சந்தலை அரிப்பைப் போக்க கற்றாழை உதவுகிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் பொடுகை போக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.