Skin Care: குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகுதா..? எந்த எண்ணெய் பிரச்சனையை குறைக்கும்?
Winter Skin Care Tips: குளிர்கால சரும பிரச்சனைகளைப் போக்க பலர் பலவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், உங்களுக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்பதைப் பொறுத்து எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அழகு கலை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், உங்கள் சரும வகைக்கு ஏற்ப எந்த வகையான எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் (Winter) பெரும்பாலான மக்கள் சரும வறட்சி, குளிரால் அலற்ஜி போன்ற சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே, இவற்றை புறக்கணிக்காமல் உடனடியாக கவனித்து சரிசெய்வது மிக மிக முக்கியம். இந்த காலகட்டத்தில், வறண்ட சருமம், சுருக்கங்கள், கருவளையங்கள், உணர்திறன் வாய்ந்த சரும பிரச்சனைகள் (Skin Problem) ஏற்படலாம். குளிர்கால சரும பிரச்சனைகளைப் போக்க பலர் பலவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், உங்களுக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்பதைப் பொறுத்து எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அழகு கலை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், உங்கள் சரும வகைக்கு ஏற்ப எந்த வகையான எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குளிர்காலத்தில் சரும வறட்சி ஏன்..? சரிசெய்ய இயற்கை வழிகள் இதோ!
தோலில் சுருக்கங்கள்:
சுருக்கங்கள் அல்லது கருவளையங்கள் போன்ற பிரச்சனைகளை குளிர்காலத்தில் சந்திப்பவர்களுக்கு ப்ரிம்ரோஸ் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதன்படி, குளிர்காலத்தில் இளமையான நீங்கள் சரும சுருக்கங்கள் பிரச்சனையை எதிர்கொண்டால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது விரைவில் நல்ல பலனைத் தரும்.




வறண்ட சருமம்:
குளிர்காலத்தில் வறண்ட சருமம் பிரச்சனை இருந்தால், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதன்படி குளிப்பதற்கு முன்பும், இரவு தூங்க செல்வதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை கைகள், கால்கள் மற்றும் முகத்தில் தடவினால், உங்கள் சருமம் மென்மையாக இருக்கும். பலரும் முகத்தில் தேங்காய் எண்ணெயை தேய்த்தால் முகப்பரு பிரச்சனை வரும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. இது சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுத்து, பரு பிரச்சனையை குறைக்கும்.
முகப்பரு பிரச்சனைகள்:
உங்கள் சருமத்தில் முகப்பரு மற்றும் பருக்கள் இருந்தால், நீங்கள் கேமிலியா எண்ணெயைப் பயன்படுத்தலாம். கேமிலியா எண்ணெய் துளைகளில் சேரும் அழுக்குகளை நீக்குகிறது. தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகக் காணப்படும்.
உணர்திறன் வாய்ந்த தோல்:
உங்கள் சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால், நீங்கள் அவகேடோ எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, லெசித்தின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கின்றன. பாதாம் எண்ணெய் அத்தகைய சருமத்திற்கு நல்லது. பாதாம் எண்ணெய் வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் டி ஆகியவற்றின் இயற்கையான மூலமாகும்.
ALSO READ: ஒரு வாரத்தில் வித்தியாசம்..! முக சுருக்கங்களை நீக்கும் 5 எளிய ட்ரிக்ஸ்..!
சாதாரண தோல்:
ஆர்கான் எண்ணெய் முகப்பரு அல்லது பருக்கள் இல்லாத சருமத்திற்கு நல்லது. இதில் வைட்டமின் ஈ இருப்பதால், இது சருமப் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை நீக்க உதவும்.