Skin Care: குளிரால் சருமத்தில் வறட்சி ஏன் ஏற்படுகிறது..? சரிசெய்வது எப்படி?
Winter Skin Dry: வறண்ட சருமத்தைப் புறக்கணிப்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட நாட்கள் சருமம் வறட்சியை சந்திக்கும்போது, சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை உண்டாகலாம். இது காயங்கள் அல்லது தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில நேரங்களில், தோல் மீது சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர்காலம் (Winter) நிலவி வருகிறது. இந்த காலகட்டத்தில், தோல் வறட்சி உள்ளிட்ட பல்வேறு தோல் பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர். குளிர்ந்த காற்று, குறைந்த அளவில் நீர் எடுத்து கொள்ளுதல் மற்றும் குறைந்த சூரிய ஒளி காரணமாக தோல் ஈரப்பதத்தை இழக்கத் தொடங்குகிறது. இவை வறண்ட சருமத்திற்கு மிகவும் பொதுவான காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்த சருமத்தில் சில நேரங்களில் அலற்ஜி, அரிப்பு மற்றும் வெள்ளை செதில் புள்ளிகள் தோன்றும். நீண்ட நேரம் சுடுதண்ணீரில் குளிக்கும் (Bathing) பழக்கம், குறைந்த வெப்பநிலை, அன்றாட சில நடவடிக்கைகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறைகளும் சருமத்தைப் பாதிக்கின்றன.
ALSO READ: காபி சருமத்திற்கு நல்லதா? கெட்டதா? மருத்துவர் சஹானா வெங்கடேஷ் விளக்கம்!
சரி செய்வது எப்படி..?
வறண்ட சருமத்தின் விளைவுகள் முகத்தில் மட்டுமல்ல. இது பாதங்கள், கைகள் மற்றும் உதடுகளையும் பாதிக்கிறது. இந்த பிரச்சனையை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், இது நாளடைவில் இன்னும் மோசமடையக்கூடும். எனவே, குளிர்காலத்தில் சரும பராமரிப்பை முன்கூட்டியே எடுக்கப்பட வேண்டும். அதன்படி, என்னென்ன செய்தால் குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
மாய்ஸ்சரைசர்:
குளிர்காலத்தில் வறண்ட சருமத்தைப் போக்க சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். ஏனெனில் இந்த பருவத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்க நீங்கள் தினமும் செய்யக்கூடிய சில எளிய விஷயங்கள் உள்ளன. அதற்கு, முதலில் குளிர்காலத்தில் குளித்த உடனேயே உங்கள் உடலில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது வறண்ட சருமத்தைத் தடுக்கும்.
மேலும், அதிக சூடான நீரில் குளிக்க வேண்டாம். கைகளை கழுவிய பின் கிரீம் தடவலாம். குளிர்காலத்தில் குறைவாக தண்ணீர் குடிப்பது சரும வறட்சியை ஏற்படுத்தும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தூங்க செல்வதற்கு முன் உங்கள் முகம், கைகள் மற்றும் கால்களில் கிரீம் அல்லது எண்ணெயை தடவலாம்.
சருமத்தில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
வறண்ட சருமத்தைப் புறக்கணிப்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட நாட்கள் சருமம் வறட்சியை சந்திக்கும்போது, சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை உண்டாகலாம். இது காயங்கள் அல்லது தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில நேரங்களில், தோல் மீது சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கூடுதலாக, சருமத்தின் வெளிப்புற அடுக்கு பலவீனமடைந்தால் பாக்டீரியாக்கள் எளிதில் நுழையும். மேலும், சருமத்தில் ஏற்படும் விரிசல் வலி அல்லது இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.
ALSO READ: பருக்கள் வந்து முகத்தில் வடுக்களா..? சரிசெய்யும் 6 எளிய குறிப்புகள்..!
இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம்?
- குளிர்காலத்தில் போதுமான அளவிற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவில் உண்ணுங்கள்.
- உங்கள் சருமத்தில் என்ன மாற்றங்கள் உள்ளது என்பதை தினசரி கவனிக்க வேண்டும்.



