Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Tamil Nadu Rains: தமிழ்நாட்டில் நவம்பர் 28, 2026 இன்று நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 28 : தெற்கு லட்சத்தீவு முதல் கடலோரக் கர்நாடகம் வரை நீண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பாதை தற்போது வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 28, 2026 இன்று நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு (Heavy Rain Alert) வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி வருகிறது. மேலும் நவம்பர் 27, 2026 நேற்று தெற்கு லட்சத்தீவு முதல் கடலோரக் கர்நாடகம் வரை நீண்டிருந்த கிழக்குக் காற்றின் தாழ்வுப் பாதை தற்போது வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 4, 2026 அன்று 7 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை: “திமுகவின் ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை தருகிறது”.. திருமாவளவன் கவலை!!




அதன் ஒரு பகுதியாக நவம்பர் 28, 2026 சனிக்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி. தென்காசி, கனனியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 29, 2026 நாளை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 28, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் பரவும் பறவை காய்ச்சல்.. கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் H5N1 வைரஸ் பாதிப்பு! பண்ணைகளில் கோழிகளை அழிக்கும் பணிகள் தீவிரம்..
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதற்கிடையே வருகிற நவம்பர் 30, 2026 திங்கள்கிழமை வங்கக்கடலில்திய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இதற்கு முன் வங்கக்கடலில் அர்னாப், முரசு, அக்வான் ஆகிய மூன்று புயல்களும் தமிழ்நாட்டுக்கு மழையைக் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.