பிக்பாஸில் வெந்தது எது? வேகாதது எது? வைரலாகும் விஜய் சேதுபதியின் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிக்ழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த 12-வது வாரம் முழுவதும் நடைப்பெற்ற விசயங்கள் குறித்து விஜய் சேதுபதி இன்று வெளிப்படையாக பேச உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டு ஒளிபரப்பானது. இந்தி மொழியில் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் மொழியில் இந்த பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 9 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் தற்போது 10-வது சீசனும் தொடங்கி தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை தொடர்ந்து 12-வது வாரம் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இந்த 12-வது வாரம் முழுவதும் நடந்த ஃபேமிலி வீக் மற்றும் போட்டியாளர்களின் செயல்கள் குறித்து இன்று நடிகர் விஜய் சேதுபதி பேச உள்ளார்.




அதன்படி இந்த 12-வது வாரம் இறுதிக்கு எட்டி உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களின் குடும்பங்களும் நண்பர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. வாரம் முழுவது லாலாலாவாக சென்ற இந்த நிகழ்ச்சி இறுதியில் போட்டியாளர்களிடையே சண்டையும் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி இவை அனைத்தையும் குறித்து பேச உள்ளது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Arivu: உன்னை நீயே.. விஜய்குமாரின் அறிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள இன்ஸா தள பதிவு:
View this post on Instagram
Also Read… தமிழ் – மலையாளம் மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன?