MS Dhoni: தல ஃபார் எ ரீசன்.. ரசிகர்களின் ட்ரெண்ட் குறித்து பேசிய எம்.எஸ்.தோனி!
MS Dhoni Jersey Number 7: எம்.எஸ். தோனி தனது ஜெர்சி எண் 7 குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜூலை 7 பிறந்தநாள் காரணமாகவே இந்த எண்ணைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். 'தல ஃபார் எ ரீசன்' ட்ரெண்ட் ரசிகர்கள் உருவாக்கியது என்றும், எண் நிபுணர் அறிவுறுத்தியும் ஜெர்சி எண்ணை மாற்ற மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
7ம் எண் ஜெர்சி என்றவுடன் 2 ஜாம்பவான் பெயர்கள் ஞாபத்திற்கு வரும். கால்பந்தில் ரொனால்டோ என்றாலும், கிரிக்கெட் ரசிகர்கள் 7 என்ற எண்ணைக் கேட்டவுடன், இந்திய அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியுமான மகேந்திர சிங் தோனியின் (MS Dhoni) பெயரை சொல்லுவார்கள். கிரிக்கெட்டில் ஏதாவது ஒரு விஷயம் 7 தொடர்பாக நடந்தால் அதற்கு தல தோனிதான் காரணம் என்பார்கள். உதாரணமாக, ஒரு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், ரசிகர்கள் 6+1 என்ற கணக்கை 7-ஆல் பெருக்கி, அந்த அணி பெற்றதற்கு தோனிதான் காரணம் என்பார்கள். இந்தநிலையில், தோனி முதன்முறையாக இது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில், ஒரு எண் நிபுணர் தனது ஜெர்சி எண்ணை 7-லிருந்து வேறு ஒன்றாக மாற்றுமாறு அறிவுறுத்தியதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ALSO READ: எம்.எஸ். தோனி ஐபிஎல் ஓய்வு.. இஷான் கிஷன் புகழாரம்..!




தல ஃபார் எ ரீசன்:
MS dhoni talks about THALA FOR A REASON 😂🫶💛 https://t.co/zV6djbSQ40
— 𝗦💛 (@mostlydhoni78) November 27, 2026
ஒரு நிகழ்ச்சியில், தனது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வரும் ‘தல ஃபார் எ ரீசன்’ (Thala for a Reason) என்ற டிரெண்ட் குறித்து எம்.எஸ். தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு தோனி, “அது என் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. அது எப்படி உருவானது என்று எனக்குத் தெரியாது. நான் எப்படியாவது 7 என்ற எண்ணை உருவாக்கியிருப்பேன், அல்லது ரசிகர்கள் அதை உருவாக்கியிருப்பார்கள். கூட்டலாம், கழிக்கலாம், பெருக்கலாம், அல்லது வகுக்கலாம். நீங்கள் விரும்பியபடி 7 என்ற எண்ணைக் கண்டுபிடித்திருக்கலாம்” என்று பதிலளித்தார்.
7-ஆம் எண் ஜெர்சியைத் தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய தோனி, “நான் இந்திய அணியில் அறிமுகமானபோது, எனது ஜெர்சி எண் பற்றிக் கேட்கப்பட்டது. நான் ஜூலை 7-ஆம் தேதி பிறந்தேன். காலியாக இருந்தால் 7-ஆம் எண்ணைக் கொடுங்கள் என்று சொன்னேன். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அது காலியாக இருந்தது. எனக்கு அது கிடைத்தது” என்றார்.
7ம் எண் கொண்ட ஜெர்சியை மாற்ற முடிவு எடுத்தாரா தோனி..?
எம்.எஸ். தோனி, ஒரு எண் நிபுணர் தனது எண்ணை 7-லிருந்து வேறு ஒன்றாக மாற்றுமாறு தனக்கு அறிவுரை வழங்கியதாகக் கூறினார். அதற்கு நான் அவரிடம், “சார், இது எங்கே போய் நிற்கும்? இன்று நான் அதை 7-லிருந்து 11-ஆக மாற்றுவேன், பிறகு அதை மேலும் அதிகரிப்பேன். நானே தொடர்ந்து தவறுகளைச் செய்துவிட்டு, அந்த எண்ணின் மீது பழி போடுவேன். நான் நன்றாகப் பயிற்சி செய்து கடினமாக உழைத்தால், அந்த எண்ணைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினேன்” என்றார்.
ALSO READ: கேப்டன்ஷி அனுபவம்.. SMAT சக்சஸ்.. சஞ்சுவை கேப்டனாக்குங்கள்.. எழும் கோரிக்கை!
எம்.எஸ். தோனி ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ஓய்வு பெற்று, தற்போது சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தோனி 2020-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.