தமிழ் – மலையாளம் மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன?
பான் இந்திய மொழிகளில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
டெலிவரி பாய் படம்: நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான லியோனியின் மகன் தான் லியோ சிவக்குமார். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகும் படம் டெலிவரி பாய். இந்தப் படத்தை இயக்குநர் நானி டார்லா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் லியோ சிவக்குமார் உடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar), பிரிகிடா சாகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் மற்றும் உதயா தீப் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஆக்ஷன் க்ரைம் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை 27-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிக்னல் அட் லெவன் தேர்ட்டி: இயக்குநர் மலர்விழி நடேசன் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் சிக்னல் அட் லெவன் தேர்ட்டி. இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் படம் நாளை 27-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நிறம் படம்: இயக்குநர் பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் நிறம். இந்தப் படத்தில் நடிகர்கள் முகன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தன்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், சினேகா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் படம் நாளை 27-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




Also Read… சிக்னல் அட் லெவன் தேர்ட்டி படத்திலிருந்து வெளியானது 3-வது சிங்கிள் வீடியோ!
ஹெய்ல் மேரி படம்: மலையாள சினிமாவில் அறிமுக இயக்குநர் விஷ்ணு ரேவிகுமார் எழுதி இயக்கி உள்ள படம் ஹெய்ல் மேரி. இந்தப் படத்தில் நடிகர் குஞ்சகபோபன் நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, அனு சித்தாரா, வினய் ஃபோர்ட், ஜெகதீஷ், சுஹாசினி மணிரத்னம், காவ்யா ராமச்சந்திரன், மற்றும் ஹக்கிம் ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் இன்று 26-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஸ்மிக் சாம்சன் படம்: மலையாள சினிமாவில் இயக்குநர் அபிஜித் ஜோசஃப் எழுதி இயக்கி உள்ள படம் காஸ்மிக் சாம்சன். ஃபாண்டசி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சந்தீப் பிரதீப், முகேஷ், மியா ஜார்ஜ், அல்தாஃப் சலீம், அல்போன்ஸ் புத்ரன், ஷபரீஷ் வர்மா, ரியா ஜித்து, மற்றும் அனுராஜ் ஓ.பி ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 27-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தினை இயக்கும் நானி பட இயக்குநர்? வைரலாகும் தகவல்