AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!

Thiruparankundram Karthigai Deepam Lighting : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபிகள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்றப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது!
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Nov 2026 17:28 PM IST

மதுரை, நவம்பர் 28 : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபிகள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலையில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்றப்பட்டது. பாதுகாப்பு கருதி முன்கூட்டியே அனுமதி பெற்ற 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படடிருந்தது. இந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

 

விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்

 

உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கை குறித்து முருக பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர் பக்தர்களின் இந்த நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் பல்வேறு ஏற்பாடுகள் கவனமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றுவதை காண மலை உச்சிக்குச் சென்ற பக்தர்களை கீழே இறங்குமாறு CRPF வீரர்கள் அறிவுறுத்தினர். மலைக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் கீழே இறங்குமாறு வலியுறுத்தினர்.

தீபத்தூண் விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 24, 2026 அன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், இந்த முறை மட்டுமே இது பொருந்தும் எனவும் நவம்பர் 20 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கோயில் அறங்காவலர் குழு கல் தூணில் தீபம் ஏற்றாமல், எப்போதும் பின்பற்றும் நடைமுறையை செயல்படுத்தியது. அதன்படி, உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கடும் விமர்சனங்களை பெற்ற இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நவம்பர் 27, 2026 நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவிட்டது.

இதையும் படிக்க : “யாருக்கும் அனுமதி கிடையாது!”.. போலீஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பரபரப்பு!!

மேலும், இன்றைய தினம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், பக்தர்கள் மலையேற தடைவிதிக்கக் கூடாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. கல் தூணில் தீபமேற்றும் நடைமுறைகளை கவனிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவின் அருகே இருக்கும் கல் தூணில் நவம்பர் 28, 2026 இன்று தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us