ஓடிடியில் வெளியாகி உள்ள டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Don't Trouble the Trouble Movie OTT Review Here | நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). இவர் தொடர்ந்து அதிக அளவில் மலையாள மொழியில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் இறுதியாக தெலுங்கு மொழியில் வெளியான படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள். ஃபேண்டசி மேஜிக் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர்கள் ஷஷாங்க் யெலெட்டி மற்றும் ஹம்ஸா அலி இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஷோயின் பிசினஸ் மற்றும் ஆர்கா மீடியா வொர்க்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.கார்த்திகேயா, ஷோபு யர்லகத்தா மற்றும் பிரசாத் தேவிநேனி ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் உடன் இணைந்து நடிகர்கள் சாரா பாலேகர், சௌரப் சச்தேவா, திவ்யா பிள்ளை, மகேஷ் மஞ்சரேக்கர், சுப்பராஜு, வெங்கடேஷ் காக்குமானு, ரோஹித் பதக், சுரபி பிரபாவதி மற்றும் வாசு இந்தூரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள் படத்தின் கதை என்ன?
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள் படத்தில் நடிகர் ஃபகத் பாசிலின் கதாப்பாத்திரம் ஒரு ப்ரைவேட் ஆம்புலன்ஸ் ஓட்டும் நபராக உள்ளார். அம்மா – அப்பா என யாரும் இல்லாமல் இருக்கும் ஃபகத் பாசில் பணம் சம்பாதிப்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த ஊர் டான் ஒருவரை ஏமாற்ற அவர் பணத்தை கேட்டு ஃபகத் பாசிலை மிரட்டுகிறார். அந்தப் படத்தை தயார் செய்வதற்காக ஒரு குழந்தையை கடந்த திட்டமிட்டு கடத்துகிறார் ஃபகத் பாசில்.




Also Read… Sai Pallavi: பேக் டூ பேக் 3 கெட்டப்.. இந்திய சினிமாவில் நடிகை சாய் பல்லவி புரியும் சாதனை!
ஆனால் அந்த பெண் குழந்தை உயிரிழந்து உள்ள நிலையில் அவர் ஃபகத்தின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. இந்த உண்மை தெரிந்த பிறகு ஃபகத் பாசில் அந்த குழந்தையிடம் இருந்து தப்பிக்க பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் அவர் தப்பித்தாரா அல்லது அந்த குழந்தையை எப்படி அனுகுகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. ஃபேண்டசி மேஜிக் பாணியில் உருவான இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவை காப்பாற்றிய படங்கள் அதுதான் – திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு!