AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2034 T20 World Cup: 2034 டி20 உலகக் கோப்பை.. USA, வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் நடத்தும் வாய்ப்பு?

2034 T20 World Cup Hosting: 2034 டி20 உலகக் கோப்பையை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்த வாய்ப்புள்ளது. 2024ல் வெற்றிகரமாக நடத்திய நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கிரிக்கெட்டை உலகளவில் பரப்ப ஐசிசி முயற்சிப்பதாலும், அமெரிக்காவில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதாலும் இது சாத்தியமாகிறது.

2034 T20 World Cup: 2034 டி20 உலகக் கோப்பை.. USA, வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் நடத்தும் வாய்ப்பு?
2034 டி20 உலகக் கோப்பை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Nov 2026 08:00 AM IST

சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த டி20 உலகக் கோப்பையை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தியது. சரியாக 10 ஆண்டுக்கு பிறகு, டி20 உலகக் கோப்பை மீண்டும் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்தப்படலாம். இந்த இரண்டு வட அமெரிக்க கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து 2034-ல் 1200-வது டி20 உலகக் கோப்பையை (World Cup) நடத்தலாம். தற்போது இதுதொடர்பான முழு விவரஙக்ளை தெரிந்து கொள்வோம்.

கடந்த 2026 அக்டோபர் மாதம், ஐசிசி 2035ம் ஆண்டு வரையிலான போட்டிகளுக்கான தனது முழு அட்டவணையை வெளியிட்டது. இருப்பினும், 2032 முதல் 2035 வரையிலான போட்டிகளை நடத்தும் நாட்டை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை. அந்த அட்டவணையின்படி, 2034 டி20 உலகக் கோப்பை 2034 ஜூலை 6 முதல் 2034 ஆகஸ்ட் 6 வரை நடைபெற உள்ளது. ‘தி கார்டியன்’ பத்திரிகையின் அறிக்கையின்படி, 2030 டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற உள்ளதால், 2034 உலகக் கோப்பையை நடத்துவதிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விலக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், கோலியின் இடம் உறுதி? பிசிசிஐ வட்டாரம் விளக்கம்!

ஐசிசியின் முயற்சி:

உலகின் பல நாடுகளில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஐசிசி முன்முயற்சி எடுத்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. மேஜர் லீக் கிரிக்கெட் தொடங்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் இன்னும் பல கிரிக்கெட் மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, போட்டிகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பும் முன்பை விட மிகவும் சிறப்பாக உள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கிற்குத் திரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியின் ஆட்டங்கள் நைட் ரைடர்ஸ் ஸ்டேடியத்தில் நடத்தப்படும். 2034ம் ஆண்டுக்கான டி20 போட்டியும் இந்த ஸ்டேடியத்தில் நடத்தப்படலாம். இந்த ஸ்டேடியம் கேகேஆர் உரிமையாளர் ஷாருக் கானின் நிறுவனத்தால் கட்டப்பட்டது.

ALSO READ: 2027 உலகக் கோப்பையில் இந்திய அணி எப்படி? உத்தேச வீரர்கள் பட்டியல்!

2024 உலகக் கோப்பையானது, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் தற்காலிக மைதானம், டெக்சாஸில் உள்ள கிராண்ட் பிரிக்ஸ் மைதானம், மற்றும் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் பிரௌவர்ட் பார்க் மற்றும் பிரௌவர்ட் கவுண்டி மைதானம் ஆகிய 3 ஸ்டேடியங்களில் நடைபெற்றது. இந்தநிலையில், 2034ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தலாம். மறுபுறம், இது வெஸ்ட் இண்டீஸ் நடத்தும் 3வது டி20 உலகக் கோப்பையாகும். இதற்கு முன்னர் 2010ம் ஆண்டிலும், 2024ம் ஆண்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்தியிருந்தன.

Follow Us