AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொகுதி மறுவரையறை.. உயரும் நாடாளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கை.. தமிழகத்திற்கு எவ்வளவு?

Lok Sabha Seats to Rise to 816: தொகுதி மறுவரையறைத் திருத்த மசோதா மூலம் மக்களவை இடங்கள் 543-லிருந்து 816 ஆகவும், தமிழ்நாட்டில் 39-லிருந்து 59 ஆகவும் உயர உள்ளன. 1971 கணக்கெடுப்பின்படி இடங்கள் அதிகரித்து, 2011 கணக்கெடுப்பின்படி எல்லை வரையறை செய்யப்படும் நிலையில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடும் உடனடியாக அமல்படுத்தப்பட உள்ளது.

தொகுதி மறுவரையறை.. உயரும் நாடாளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கை.. தமிழகத்திற்கு எவ்வளவு?
தொகுதி மறுவரையறை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Nov 2026 08:03 AM IST

சென்னை, நவ.29: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மகளிர் இட ஒதுக்கீட்டுடன் கூடிய தொகுதி மறுவரையறை திருத்த மசோதா மூலம், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 816 ஆக உயர உள்ளது. இதன்படி 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் வரையறை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படுவதுடன், அதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா மூலம் அதிகரிக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான வரைபடத்தை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: “அமித் ஷாவை சந்தித்தது ஏன்?”.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்?.. கனிமொழி கொடுத்த விளக்கம்!

தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களின் தொகுதி உயர்வு:

மக்களவையின் மொத்த இடங்கள் தற்போதைய 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயர உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி இரண்டாக உயர்கிறது. கேரளாவில் 20 தொகுதிகள் 30 ஆகவும், கர்நாடகாவில் 28-லிருந்து 42 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25-ஆக உள்ள தொகுதிகள் 38 ஆகவும், தெலுங்கானாவில் 17-ஆக இருக்கும் தொகுதிகள் 26 ஆகவும் உயர உள்ளன. இதன் மூலம் தென்மாநிலங்களின் மொத்தத் தொகுதி எண்ணிக்கை 129-லிருந்து 195 தொகுதிகளாக அதிகரிக்கிறது.

சதவீதப் பங்கீடும் மற்ற மாநிலங்களின் விவரமும்:

சதவீத அடிப்படையில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குக் கூடுதலாக 0.5 சதவீதம் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் மாற்றமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற முக்கிய மாநிலங்களைப் பொறுத்தவரை, அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் தற்போதுள்ள 80 தொகுதிகள் 120 இடங்களாக உயர உள்ளன. மகாராஷ்டிராவில் 48-லிருந்து 72 தொகுதிகளாகவும், மேற்கு வங்கத்தில் 42-லிருந்து 63 தொகுதிகளாகவும், பீகாரில் 40-லிருந்து 60 இடங்களாகவும் அதிகரிக்க உள்ளது.

இதையும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!

யூனியன் பிரதேசங்களின் நிலைவரம்:

தொகுதி மறுவரையறை மாற்றங்களுக்கு இடையே சில யூனியன் பிரதேசங்களில் தொகுதி எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே உள்ள தலா ஒரு தொகுதியில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச வாரியான இந்த எண்ணிக்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதாவின் அடிப்படையில் அமைந்துள்ளன.

Follow Us