AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CM Vijay speech: நான் மன்னர் பரம்பரை அல்ல – அதிரடியாக பேசிய முதலமைச்சர் விஜய்!

CM Vijay speech at Oath ceremony: “என் நெஞ்சில் குடியிருக்கும்…” என தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த சூழலில், இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். “எனக்கும் வாழ்க்கையில் வறுமை என்றால் என்னவென்று தெரியும். பசி என்றால் என்னவென்று தெரியும் என பேசியுள்ளார்.

CM Vijay speech: நான் மன்னர் பரம்பரை அல்ல – அதிரடியாக பேசிய முதலமைச்சர் விஜய்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 10 May 2026 11:54 AM IST

சென்னை, மே 9, 2026: “என் நெஞ்சில் குடியிருக்கும்…” என தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த சூழலில், இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். “எனக்கும் வாழ்க்கையில் வறுமை என்றால் என்னவென்று தெரியும். பசி என்றால் என்னவென்று தெரியும். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் கிடையாது. உங்களில் ஒருவன், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுத்தீர்கள்.

உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக வந்த எனக்கு, ‘நீ வா விஜய்… நாங்க பாத்துக்கிறோம்’ என சொல்லி, அவ்வளவு அன்பாகவும், அவ்வளவு உறவாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்” என அவர் உரையாற்றினார்.

எனக்காக என்னுடன் நின்றவர்கள்:

மேலும், “இந்தப் பிராசஸ்ல எனக்கு எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவோ வலிகள் இருந்தாலும், எனக்காக கூட நின்று உங்களுக்கும் அதே மாதிரி கஷ்டங்கள், அதே மாதிரி அவமானங்கள் வந்தன. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், என்னோட வலிகளை உங்களுடைய வலிகளாக நினைத்து என் கூடவே நின்று, இன்னைக்கு சி. ஜோசப் விஜய் எனும் நான் அதை உண்மையாக்கியுள்ளீர்கள்.

உண்மையிலேயே எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் என்னுடைய உறவுகள், என்னுடைய சொந்தங்கள்.

 நான் ஒன்றும் தேவதூதன் அல்ல:

நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. நானும் இயல்பான ஒரு வாழ்க்கை வாழும் சாதாரண மனிதன்தான். நான் முன்னாடியே சொன்ன மாதிரி, ‘அதை செய்வேன், இதை செய்வேன்’ என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியமோ அதை மட்டும்தான் செய்வேன்.

நீங்கள் என் கூட இருக்கும் வரையில், சாத்தியம் இல்லாத விஷயங்களையும் சாத்தியப்படுத்துவேன். ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம், என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்’ என்ற ஒரு நம்பிக்கை என் மனதில் இருக்கிறது” என முதலமைச்சர் Vijay தெரிவித்தார்.

Follow Us