‘சோஃபா செல்கிறது.. புது முதல்வர் செல்கிறார்’.. புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி!
Udhayanidhi Stalin criticised TVK | தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை புஷ்பா படத்தின் சோஃபா காட்சியை வைத்து விமர்சனம் செய்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவர் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றிப் பெற்று மற்ற கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சியை அமைத்துள்ளது தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம். மொத்தம் 234 தொகுதிகளில் மேஜிக் நம்பர் என்று கூறப்படும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாமல் 108 இடங்களில் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வென்று இருந்தது. மற்ற இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெற்று இருந்தது. எந்த கட்சி உடனும் கூட்டணி இல்லாமலே தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 இடங்களில் வெற்றிப் பெற்று இருந்தது. அதில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான தளபதி விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிப் பெற்று இருந்தார். அதனால அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யவேண்டிய காரணத்தால் மொத்தம் 107 தொகுதிகளே தவெகவின் கைவசம் உள்ளது.
இந்த தொகுதிகள் ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக திமுக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளிடம் ஆதரவு பெற்று தற்போது ஆட்சியையும் அமைத்தது விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகின்றது. அப்படி இன்று தமிழக வெற்றிக் கழகம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகி வருகின்றது.
புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி:
மேஜிக் நம்பர்ஸ் இல்லாமல் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்ததாக தனது உறையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் என்.டி.ஏ கூட்டணி கட்சியில் பிளவுபட்ட தலைவர்களை சந்தித்தது குறித்து விமர்சித்து பேசினார். அதன்படி என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அதிமுக தற்போது ஒரு தலைமையின் கீழ் இல்லாமல் உட்கட்சி பூசலால் பிரிந்து இருப்பதாக செய்திகள் வருகின்றது.




Also Read… மீண்டும் ஜன நாயகன் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமேசான் நிறுவனம்? வைரலாகும் தகவல்
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.பி. வேலுமணியின் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்து பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலி விமர்சித்து பேசியுள்ளார். அதில் தெலுங்கு சினிமாவில் வெளியான புஷ்பா 2 படத்தின் சோஃபா காட்சியை குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினை விமர்சித்து உள்ளார்.
பிளவுபட்ட அதிமுக பிரிவு வீட்டுக்கு முதல்வர் சென்றதை மக்கள் விரும்பவில்லை. ஊழல் சக்தியோடு சேர்ந்த ஆளும்கட்சியை மக்கள் சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர். மேலும் உங்களுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் கூட்டணிகளும் வருத்தத்தில் உள்ளனர் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read… அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?