அவர் சிஎம் ஆகியிருந்தால்… ரஜினியின் பேச்சுக்கு கமல் கொடுத்த ரியாக்ஷன்
Kamal Haasan : விஜய்யை சந்திக்காதது குறித்து கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை கிடையாது. ஒருவேளை கமல் முதல்வராகியிருந்தால் பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ என பதிலளித்தார். அவரது பதில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மே 17 : நடிகர் ரஜினிகாந்த் திடீரென மே 17, 2026 இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு வாழ்த்து தெரிவிக்கவில்லை. நான் விஜய்யை பார்த்து பொறாமைப்படுகிறேன் என விமர்சனங்கள் பரவியது. நான் அரசியலில் இல்லை. பின் எதற்கு நான் விஜய்யை பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்றார். மேலும் ஒருவேளை கமல் சிஎம் ஆகியிருந்தால் பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ என பேசியிருந்தார். அப்ப கூட வந்திருக்காது. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது என்றார்.
இந்த நிலையில் இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர், அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நாங்கள் இருவரும் போட்டிதான் போடுவோம். பொறாமைப்படமாட்டோம். நடிகர் ரஜினிகாந்த் சிரிப்போடு தான் சொல்லியிருப்பார். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது. நாங்கள் சினிமா துறையில் இருக்கிறோம். கிரிக்கெட்டில் இருந்தாலும் இப்படித் தான் இருந்திருப்போம் என்றார்.




இதையும் படிக்க : Kamal Haasan: திரைத்துறை மேம்பாடு.. முதலமைச்சர் விஜய்க்கு 6 கோரிக்கை வைத்த கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!
ரஜினியின் பேச்சுக்கு கமல் பதில்
Madurai, Tamil Nadu | On CM Vijay, MNM President and MP Kamal Haasan says, “Many new people have come in. But newcomers are nothing unusual in politics. When India got independence, all the ministers were newcomers too. So we shouldn’t underestimate newcomers, nor should we… pic.twitter.com/pLGHO10KNv
— ANI (@ANI) May 17, 2026
மேலும் அவரிடம் திராவிட கட்சிகளின் ஆட்சியை தவெக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக எழும் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து தமிழ் பேசும் ஒருவர் கட்சி தொடங்கினால் அதுவும் திராவிட கட்சி தான் என்றார்.
இதையும் படிக்க : தவெக அமைச்சரவையில் விசிக எண்ட்ரி?.. எதிர்பாராத திருப்பம்?.. சஸ்பென்ஸ் வைக்கும் தலைமை!
தொடர்ந்து பேசிய அவர், பல புதிய முகங்கள் அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், அரசியலில் புதுமுகங்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற அனைவரும் கூடப் புதுமுகங்கள்தாம். எனவே, புதுமுகங்களை நாம் குறைத்து மதிப்பிடவும் கூடாது. அதே சமயம், அவர்களிடம் அளவுக்கு அதிகமானவற்றை எதிர்பார்க்கவும் கூடாது. வாக்களித்தவர்கள் நீங்கள்தானே? எனவே, என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு, அனைத்தும் முறையாக நடைபெறுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். நாங்களும் அதைக் கூர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.