AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜ்மோகனின் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால்… ஆதரவு குரல் கொடுக்கும் கோலிவுட் பிரபலங்கள்!

Kollywood celebrities raise their voices in support for Rajmohan | தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ராஜ்மோகனை திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராக பதவி கொடுத்த நிலையில் நடிகர் விஷால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோலிவுட் பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்மோகனின் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால்… ஆதரவு குரல் கொடுக்கும் கோலிவுட் பிரபலங்கள்!
முதலமைச்சர் விஜய் - அமைச்சர் ராஜ்மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 May 2026 07:00 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையா போட்டியிட்டு போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்ற நடிகர் தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆட்சியை அமைத்தார். முதலமைச்சராக தளபதி விஜய் பதவி ஏற்ற நிலையில் அமைச்சராக பலர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அந்த எக்ஸ் தள பதிவில் விஷால் கூறியதாவது, நஷ்டத்தில் இருக்கும் சினிமா துறையை தூக்கி விடுவதற்கு சினிமாவில் 30 ஆண்டுகளாக பயணித்த மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பை ஏற்று இருக்க வேண்டும்.

மேலும் ராஜ் மோகன் அவர்களுக்கு திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சர் பதவியை அளித்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் பல கோலிவு பிரபலங்கள் ராஜ் மோகனுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் வெற்றிபெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து தற்போதைய முடிவுகளில் தலையிடாதீர்கள். எத்துறையைச் சேர்ந்தவரோ, அதே துறையைச் சார்ந்த ஒருவராக இருப்பதால்—அவர் எங்கள் பிரச்சினைகளை நன்கு அறிவார் என்றும், நிச்சயமாக எங்களுக்கு உதவுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து அவரது முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள்; அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். நாம் இப்போதே எந்தவொரு முடிவிற்கும் வந்துவிட வேண்டாம். அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புவோம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நமது மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் நான்பா முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனையின்றி இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார். உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, நாம் இதற்குச் சிறிது அவகாசம் அளித்து நமது ஆதரவை வழங்குவோம். அமைச்சர் ராஜ்மோகன் திரையுலக நலனுக்காகத் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்று நான் நம்புகிறேன்.

குறிப்பாக, திரையுலகம் தற்போது எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​கவலைகளை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில், மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் இந்தப் பொறுப்பில் நிலைபெறுவதற்குச் சிறிது கால அவகாசமும் நியாயமான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

Also Read… கட்டாளன் படத்திலிருந்து வெளியானது துஷாரா விஜயினின் போஸ்டர்

நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அண்ணாவின் முடிவுகளை நாம் அனைவரும் மதித்து, அதன் பலன்கள் வெளிப்படச் சற்று அவகாசம் அளிப்போம். ஒருவர் தன்னை நிரூபித்துக்காட்ட வாய்ப்பளிக்காமலேயே, அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது நியாயமல்ல.

நமது துறை எதிர்கொண்டுள்ள சவால்களை நமது முதலமைச்சர் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்; அவரது வழிகாட்டுதலின் கீழ், மதிப்பிற்குரிய அமைச்சர் ராஜ்மோகன் ஐயாவின் பணிகள் ஒரு புதிய தரநிலையை அமைக்கும் என்று நாம் முழு நம்பிக்கையுடன் நம்பலாம்.

Also Read… Keerthy Suresh: மனம் மற்றும் உடல் ரீதியாக பின்னடைவு.. உடல் எடையை குறைத்து இப்படிதான் – கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!

Follow Us