AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டாளன் படத்திலிருந்து வெளியானது துஷாரா விஜயினின் போஸ்டர்

Actress Dushara Vijayans Poster From Malayalam Movie Kattalan | தமிழ் சினிமாவில் நாயகியாக பலப் படங்களில் நடித்த நடிகை துஷாரா விஜயன் தற்போது மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி உள்ளார். அந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

கட்டாளன் படத்திலிருந்து வெளியானது துஷாரா விஜயினின் போஸ்டர்
துஷாரா விஜயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 May 2026 15:36 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் என்ற படத்தில் ஒரு பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகை துஷாரா விஜயன். இந்தப் படத்தில் அவர் யார் என்றே தெரியாமல் சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நடிகையாக அறிமுகம் ஆகி பல பேட்டிகளில் பேசும் போதே தான் சர்க்கார் படத்தில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்ததாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் சந்த்ரு கே.ஆர் எழுதி இயக்கிய போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை துஷாரா விஜயன். அந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை துஷாரா விஜயன் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதன்படி நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன் என பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இவரது கதாப்பாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் இறுதியாக நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்து இருந்தார். கடந்த 2025-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் நடிகை துஷாரா விஜயன் அறிமுகம் ஆக உள்ளார்.

கட்டாளன் படத்திலிருந்து வெளியானது துஷாரா விஜயனின் போஸ்டர்:

மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது கட்டாளன் படம். இந்தப் படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகை துஷாரா விஜயனின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி… கட்டா குஸ்தி 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

கட்டாளன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தியேட்டரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கருப்பு படம்… வைரலாகும் படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!

Follow Us