தியேட்டரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கருப்பு படம்… வைரலாகும் படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!
Karuppu Movie Team Celebrating Success: நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தற்போது படக்குழு வீடியோ ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் கடந்த 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனல் தயாரிப்பாளர் ஒரு நிதிச் சிக்கலில் சிக்கிக்கொண்ட காரணத்தால் 14-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக நேற்று 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு கருப்பு படம் நேரடியாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கோர்ட் ரூம் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்து உள்ளார்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி,
நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், நமோ நாராயணா, வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன், ஜாபர் சாதிக், சாண்டி மாஸ்டர், ஜனனி குணசீலன், அஜு வர்கீஸ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




தியேட்டரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கருப்பு படம்:
பல தடைகளைத் தாண்டி திரையரங்குகளில் வெளியான இந்த கருப்பு படத்தை ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடித் தீர்க்கின்ற்னார். மேலும் தியேட்டரில் கருப்பு படம் பளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… இது தேவதாசின் ரத்தம் தெறிக்கும் ஆட்டம்… வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s a FIERY THEATRICAL CELEBRATION 💥#Karuppu – Extraordinary response from audiences across TN, Kerala, AP, TL and the rest of the world 🌍#KaruppuBlockbuster – on the big screens now!
A @SaiAbhyankkar Musical 🎵@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu… pic.twitter.com/jG8SDQ0xDe
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 16, 2026
Also Read… தமிழ் சினிமா ரசிகர்களே இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன பார்க்கலாமா?