அமெரிக்கன் படத்தை ரீமேக் செய்கிறாரா இயக்குநர் மணிரத்னம்? இணையத்தில் வைரலாகும் தகவல்
Director Mani Ratnams Next Is Remake Or Inspired | பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ரீமேக் அல்லது தழுவலா என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பான் இந்திய மொழிகளில் இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் மணிரத்னம். இவர் சினிமாவில் 1983-ம் ஆண்டுகளில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களை இயக்கி இருந்தாலும் இயக்குநராக அறிமுகம் ஆனது என்னவோ கன்னட மொழியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் மூன்றாவதாக தான் தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் படங்களை இயக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் தமிழ் சினிமாவில் கடந்த 1985-ம் ஆண்டு பகல் நிலவு என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களையும் தமிழ் சினிமாவில் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கினார் இயக்குநர் மணிரத்னம். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை பான் இந்திய மொழிகளில் மொத்தம் 29 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




அமெரிக்கன் படத்தை ரீமேக் செய்கிறாரா இயக்குநர் மணிரத்னம்?
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 30-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான கிரேசி, ஸ்டுப்பிட், லவ் என்ற படத்தின் ரீமேக் அல்லது தழுவலா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது எந்த அளவிற்கு உன்மை என்பதை படக்குழு வெளிப்படையாக தெரிவிக்கும் போதே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… லைகா புரடெக்ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்ஷன் உள்ளது – ஜேசன் சஞ்சய்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ManiRatnam‘s Next – Remake or Inspired? 👀🎬
Director Mani Ratnam’s upcoming film starring #VijaySethupathi and #SaiPallavi is currently progressing with its shooting schedule in Kolkata.
Meanwhile, Reports suggests the film is either an official remake or loosely inspired by… pic.twitter.com/meA896onV0
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) August 1, 2026
Also Read… Yash: பேய் படங்கள் என்றாலே பயம்.. நல்ல கதை இருந்தால் நிச்சயம் நடிப்பேன் – யாஷ்!