Ravi Mohan: என் முழு மனதுடன்… நடனமாடிய வீடியோவை வெளியிட்ட ரவி மோகன்!
Ravi Mohan Instagram Video Post : தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரவி மோகன். இவர் சமீபகாலமாக படங்களில் நாயகனாகவும், இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். அண்மையில் இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் நடனமாடி பதிவை வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthkeyan) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருக்கு எதிரியாக ரவி மோகன் நடித்திருந்தார். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலே வெளியானது. இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறவில்லை. இப்படத்திற்கு பின் நடிகராக பல படங்களில் கமிட்டான நிலையில், இயக்குநராகவும் “அன் ஆர்டினரி மேன்” (An Ordinary Man) என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.
இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ரவி மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. சமீபகாலமாக ரவி மோகன் மீது நெகடிவ் விமர்சனங்கள் வருகின்ற நிலையில், அதை கண்டுகொள்ளாத வகையில் அவர் வெளியிட்ட பதிவு வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: நோ நடிப்பு… டைரக்ஷன் தான் – யாத்ரா தனுஷ் குறித்து வைரலாகும் தகவல்!
சமீபத்தில் ரவி மோகன் பகிர்ந்த பதிவின் கீழ் உள்ள விவரங்கள்:
அந்த பதிவில் ரவி மோகன், “நேற்று இரவு என் குடும்பத்தினரைச் சந்தித்தேன். என் முதல் இயக்கத்தில் உருவாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படம் மற்றும் அதன் இசையின் ஒரு சிறு காட்சியை அவர்களுக்குக் காட்டினேன். என் முழு மனதுடன் விரைவில் உங்களிடம் வரவிருக்கிறது. என் குடும்பத்தினர், குறிப்பாக அப்பா, என்னை உற்சாகப்படுத்திய விதம், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரிடமிருந்து பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் ஒரு வரம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
நடிகர் ரவி மோகன் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். தயாரிப்பாளராக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கியிருந்தார். இதையடுத்து இயக்குநராக அன் ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இதையும் படிங்க: அமெரிக்கன் படத்தை ரீமேக் செய்கிறாரா இயக்குநர் மணிரத்னம்? இணையத்தில் வைரலாகும் தகவல்
மேலும் இவர் ஹீரோவாக கராத்தே பாபு, ப்ரோ கோட் போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் முக்கியமான வேடத்தில் பென்ஸ் மற்றும் சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை போன்ற படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



