GV Prakash: ஹேப்பி ராஜ் படம் சாதாரண ஃபன் படம் மாதிரி இருக்காது.. இதில் நிறைய மீனிங் இருக்கு – ஜி.வி. பிரகாஷ் குமார் ஓபன் டாக்!
G.V. Prakash About Happy Raj Movie Theme: நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் ஹேப்பி ராஜ். இப்படத்தின் தெலுங்கு ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றிருந்தது. அதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் மரியா ராஜா எலஞ்செழியன் (Maria Raja Elanchezian) இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் “ஹேப்பி ராஜ்” (Happy Raj). இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gauri Priya) நடித்துள்ளார். இவர்களுடன் இப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியான், அப்பாஸ், கீதா கைலாசம், ப்ரதானா நாதன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முழுக்க காமெடி, காதல் எமோஷனல் மற்றும் முழுக்க அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தை பியோன்ட் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மார்ச் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
அதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இன்று 2026 மார்ச் 20ம் தேதியில் தெலுங்கில் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார் ஹேப்பி ராஜ் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ட்ரெண்டிங் கதாநாயகியாக சாரா அர்ஜுன்.. துரந்தர் படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹேப்பி ராஜ் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் சொன்ன சுவாரஸ்ய தகவல்:
தெலுங்கு ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார் , அதில் “ஹேப்பி ராஜ் படமானது சாதாரண கமெர்ஷியல் ஃபன் திரைப்படமாக இருக்காது. படத்தில் நகைச்சுவை எல்லாம் இருக்கு. அதைவிடவும் படத்தில் நல்ல கருத்து ஒன்று இருக்கிறது. நீங்கள் இந்த படத்தை பார்த்தபிறகு அந்த கருத்தை நீங்களும் எடுத்துக்கொள்வீர்கள். இப்படம் மிகவும் சிறப்பான திரைப்படம், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
இதையும் படிங்க: ரசிகர்கள் ஷாக்.. விரைவில் விஜய் டிவியில் முடிவுக்கு வரும் சீரியல்? எந்த தொடர்-னு தெரியுமா?
அனைவரின் வாழ்க்கையில் அவர் அவர்களின் தந்தை அவர்களுக்கு ஒரு ஹீரோவை போலத்தான். இந்த படம் தந்தை மற்றும் மகனின் கதையை மையமாக கொண்டது. இதற்காக இயக்குநர் மரியா ராஜாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்கு. படம் பார்க்கும் அனைவருக்கும் ஹேப்பி ராஜ் படம் மிகவும் பிடிக்கும்” என நினைக்கிறன் என அதில் அவர் பேசியிருந்தார்.
ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேசிய வீடியோ பதிவு:
Multi-Talented #GVPrakash‘s superb speech at the #HappyRaj Telugu Trailer Launch Press Meet ❤️🔥
In Cinemas from March 27th. Grand Release across Telugu States by @MythriRelease ✨#HappyRaj #TeluguTrailerLaunch @jaivarda04 @SureshJaikanth @gvprakash @actorabbas @srigouripriya… pic.twitter.com/6vwisVj4jp
— Mythri Movie Distributors LLP (@MythriRelease) March 20, 2026
ஜி.வி.பிரகாஷின் ஹேப்பி ராஜ் படமானது வரும் 2026 மார்ச் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தை பார்த்த தனுஷ் இதற்கு முதல் விமர்சனங்கள் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.