AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GV Prakash: ஹேப்பி ராஜ் படம் உங்களை அழவைக்கும், சிரிக்கவும் வைக்கும் – ஜி..வி. பிரகாஷ் குமார் பேச்சு!

GV.Prakash About Happy Raj Movie: ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், அவரின் நடிப்பில் புதிதாக தயாராகியுள்ள படம்தான் ஹேப்பி ராஜ். இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், பேசிய ஜி.வி.பிரகாஷ் படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.

GV Prakash: ஹேப்பி ராஜ் படம் உங்களை அழவைக்கும், சிரிக்கவும் வைக்கும் – ஜி..வி. பிரகாஷ் குமார் பேச்சு!
ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி ராஜ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Mar 2026 15:00 PM IST

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. இசையமைப்பாளராக இரு முறை தேசிய விருது இவருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் (Darling) என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக நுழைந்த நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 25 படங்களுக்கும் மேல் நாயகனாக நடித்துள்ளார். அந்த வகையில் இவர் அறிமுக இயக்குநர் மரியா ராஜா எலஞ்சியன் (Maria Raja Elanchezhian) இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் “ஹேப்பி ராஜ்” (Happy Raj). இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் நேற்று 2026 மார்ச் 16ம் தேதியில், இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி மற்றும் கவின் போன்ற நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். அண்ட் நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஹேப்பி ராஜ் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி.. வெளியானது ‘நூறு சாமி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேசிய விஷயம்:

ஹேப்பி ராஜ் பட ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய ஜி.வி. பிரகாஷ், “திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின்போது, ஆதிக் ரவிச்சந்திரனுக்கு எனக்கும் நல்ல வைப் இருந்தது. அதுபோலவே எனக்கும் இயக்குநர் மரியா ராஜா எலஞ்சியனுடன் ஒரு நல்ல வைப் இருக்கிறது. அந்த திரைப்படம் ஏ சென்சார் சான்றிதழ் வாங்கி வெளியாகியிருந்தது. ஆனால் ஹேப்பி ராஜ் படமானது அனைத்துவிதமான ரசிகர்களும் ரசிக்கும் படமாகவே இருக்கும். இந்த படம் உங்களை அழவைக்கும் மற்றும் சிரிக்கவைக்கும். கண்டிப்பாக ஒர்த் ஆனா திரைப்படம்” தெரிவித்துள்ளார்.

ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து நடிகர் ஜி..வி. பிரகாஷ் வெளியிட்ட பதிவு:

இந்த ஹேப்பி ராஜ் படத்தை மரியா ராஜா எலஞ்சியன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக லவ்வர் பட புகழ் நடிகை நடித்துள்ளார். மேலும் இதில் நடிகர்கள் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் முழுக்க காமெடி, ஆக்ஷன் மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு… வைரலாகும் போட்டோ!

இந்த படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இப்படம் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us