AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பேட்ரியாட் படம் – எங்கு எபோது பார்க்கலாம் தெரியுமா?

Patriot movie will be release in Zee 5 OTT on June 5th 2026 | நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற பேட்ரியாட் படம் ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பேட்ரியாட் படம் – எங்கு எபோது பார்க்கலாம் தெரியுமா?
பேட்ரியாட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2026 19:48 PM IST

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனரோ அதே மாதிரி மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் எப்போது இணைந்து ஒரே படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்து சுமார் 18 ஆண்டுகள் கடந்துவிட்டது. முன்னதாக இவர்கள் அதிக அளவில் படங்களில் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர்களுக்கு சினிமாவில் பொதுவாக இருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவரை சப்போர்ட் செய்துக் கொள்வது அவர்களின் ரசிகர்களிடையே தொடர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்தப் படம் பேட்ரியாட்.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, ராஜீவ் மேனன், ஜரின் ஷிஹாப், பிரகாஷ் பெலவாடி, கிரேஸ் ஆண்டனி, இந்திரன், ஜினு ஜோசப், ஷாஹீன் சித்திக், இஷான் ஷௌகத், ஷிவதா, ஸ்ரீபார்வதி, கீதி சங்கீதா, சுதி கோழிக்கோடு, அமலா ரோஸ் குரியன், வைஷாக் சங்கர், வினீத் தட்டில் டேவிட், சாம்சன் மேத்யூ வலியபரம்பில், சான்யா நாயர், சனல் அமன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் பேட்ரியாட் படம்:

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான இந்தப் படம் கடந்த 1-ம் தெதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஸ்பை த்ரில்லர் ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2026-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இயக்குநர் டூ நாயகன்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர்-னு தெரியுமா?

படக்குழு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 Malayalam (@zee5malayalam)

Also Read… கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து புது படங்களுக்கு கதை கேட்கும் சூர்யா… வைரலாகும் தகவல்

Follow Us