Mamitha Baiju : சூர்யாவின் ‘சூர்யா46’ படப்பிடிப்பில் இணைந்த நடிகை மமிதா பைஜூ!
Mamitha Baiju Joins Suriya46 Shoot : நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சூர்யா46. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் முன்னணி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், நடிகை மமிதா பைஜூவும் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெங்கி அட்லூரி (Venky Atluri). இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் சூர்யா46 (Suriya46). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya) முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த இடமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவருகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி ஏற்கனவே, வாத்தி (vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இந்த படங்களின் வரவேற்பை அடுத்துத்தான் சூர்யாவுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சூர்யாவுடன் வணங்கான் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் இருவருமே அந்தப் படத்தில் இருந்து விலகினர்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் 11ம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில், நடிகை மமிதா பைஜூ இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். சூர்யா46 பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் (Hyderabad) நடைபெற்று வரும் நிலையில், நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார். இது குறித்தான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




சூர்யா46 படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் ஆரம்ப பதிவு :
The first step towards celebration, emotion and entertainment ❤️#Suriya46 shoot begins! @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavi @NavinNooli @Banglan16034849 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/WcBTgwA7LG
— Sithara Entertainments (@SitharaEnts) June 11, 2025
இதையும் படிங்க :தனுஷின் பிறந்தநாள்: ரீ-ரிலீசாகும் ‘அம்பிகாபதி’ திரைப்படம்!
சூர்யா46 படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ இணைந்துள்ளார்.. இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சூர்யா46 திரைப்படத்தின் அப்டேட் :
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு, படக்குழு “விஸ்வநாதன் அண்ட் சைன்ஸ்” என டைட்டில் வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க :தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ ஷூட்டிங்.. தனுஷ் செய்த உதவி!
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை வரும் 2025, ஜூலை 23ம் தேதி வரவிருக்கும் நிலையில், இப்படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.