Samantha Ruth Prabhu : பிரபல இயக்குநருடன் வலம்வரும் சமந்தா.. ரசிகர்கள் மத்தியில் கவனம் பெரும் புகைப்படம்!
Samantha Instagram Post Viral : பான் இந்திய முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சமந்தா பிரபல இயக்குநருடன் அமெரிக்காவில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அது வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா பான் இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குஷி. கடந்த 2023ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்ததாக உடல் நிலையில் சரியில்லாத காரணத்தால் படங்களில் நடிக்கவில்லை. மேலும் கடந்த 2024ம் ஆண்டு வெளியான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சமந்தா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். இவரின் தயாரிப்பில் இறுதியாகச் சுபம் என்ற படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் அவரும் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் சமந்தா , பிரபல இந்தி இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ்நிதி மோரு என்பவருடன், இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் தெலுங்கு அமைப்பு சார்பில் விழா ஒன்று நடைபெற்றிருந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட பின் தனது நண்பர்களுடனும், ராஜ்நிதி மோருவுடனும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.’




இதையும் படிங்க : விவாகரத்து தொடர்பான வதந்தி.. ஸ்டைலாக பதிலளித்த நயன்தாரா!
நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் :
View this post on Instagram
நடிகை சமந்தா – ராஜ்நிதி மோரு :
நடிகை சமந்தா சமீப காலமாக, தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜ்நிதி மோரு என்பவருடன் பல இடங்களுக்குச் சென்று வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமண செய்ய இருப்பதாகவும் இணையதளங்களில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி, பின் விவாகரத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அது ஒரு அழகான நினைவு.. பர்ஸ்ட் லவ் குறித்து மனம் திறந்த அனுஷ்கா ஷெட்டி!
இதைத் தொடர்ந்து சமீப காலமாக நடிகை சமந்தா வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில், இவரின் முகம் அதிகமாகத் தென்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது குறித்து நடிகை சமந்தா ரூத் பிரபு எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளராக சமந்தா ரூத் பிரபு :
நடிகை சமந்தா ரூத் பிரபு, திரைப்படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவர் ட்ரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். இவரின் தயாரிப்பில் சுபம் என்ற திரைப்படம் கடந்த 2025, மே 9ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.