நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி
Director Atlee Kumar : இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் அட்லி. இவர் தமிழில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னனி இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லி குமார் (Director Atlee Kumar). இவர் நண்பன் படத்தில் ஒரு பாடலின் காட்சியில் டேக் சொல்வதற்காக ஃப்ரேமில் வருவார். இதனைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் இயக்குநர் அட்லி கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, ஜெய், நயன்தாரா மற்றும் நஸ்ரியா நசீம் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். சினிமாவில் நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த நடிகை நயன்தாராவிற்கு இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் வெற்றிப்படங்களாகவும் அவர் அடுத்த உயரத்திற்கு செல்ல இந்தப் படம் உதவியதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இரண்டாவது படமே நடிகர் விஜயை இயக்கினார். 2016-ம் ஆண்டு வெளியான இந்த தெரி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் அட்லிக்கு வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்ஷல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்தே தமிழ் சினிமாவில் படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்தப் படம் பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கனு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் அல்லூ அர்ஜூனின் படத்தை இயக்கி வருகிறார்.




நான் கதை சொன்னா யாருமே நோ சொல்லமாட்டாங்க:
இந்த நிலையில் இயக்குநர் அட்லி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். முன்னதாக இவர் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, நான் ஒரு கதையை சொல்கிறேன் என்றால் நீங்க தியேட்டரில் எப்படி படம் பார்ப்பீங்களோ அப்படிதான் கதை சொல்வேன்.
இதுதான் ஒன்லைன் அப்படினு நான் கதையை சொல்லி முடிக்கமாட்டேன். நான் ஒரு கதையை சிறப்பாக சொல்ல மிகவும் சிரத்தை எடுப்பேன். அதனால் தான் நான் படத்தின் கதையை சொன்னால் இதுவரை யாரும் பிடிக்கவில்லை என்று சொன்னதே கிடையாது என்றும் அட்லி தெரிவித்துள்ளார்.
Also Read… கிஸ் படத்தின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்த நெல்சன் திலீப் குமார்
இயக்குநர் அட்லியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ஓவியாவிற்கு பிறகு ரசிகர்களிடையே அதிகம் பிரபலமான பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?