Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OG Movie Review: மிரட்டிய பவன் கல்யாண்.. OG படம் எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ!

They Call Him OG Review: பவன் கல்யாண் நடிப்பில் வெளியான "OG" படம் எளிமையான கதைக்களமாக இருந்தாலும், சுஜித் இயக்கத்தில் அவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள், பின்னணி இசை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

OG Movie Review: மிரட்டிய பவன் கல்யாண்.. OG படம் எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ!
ஓஜி படம் விமர்சனம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Sep 2025 08:43 AM IST

ஆந்திர மாநிலத்தின் சினிமா துறையின் பவர் ஸ்டாரும், துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே “OG” படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், பிரகாஷ் ராஜ், இம்ரான் ஹாஷ்மி, ஷ்ரியா ரெட்டி, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஜித் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார். நாம் “OG” படத்தின் விமர்சனத்தைப் பற்றிக் காணலாம்.

படத்தின் கதை

1970களில் கதை தொடங்குகிறது.  ஜப்பானில் இருந்து சில இந்தியர்கள் தப்பித்து மும்பைக்கு வருகிறார்கள். அவர்களில் சத்ய நாராயணாவும் (பிரகாஷ் ராஜ்) ஒருவர். அவருடன் சேர்ந்து ஓஜஸ் கம்பீரும் (பவன் கல்யாண்) மும்பைக்கு வருகிறார்.  சத்ய நாராயணா காலப்போக்கில் சத்ய தாதா என அழைக்கப்படுகிறார். தன்னைச் சுற்றி மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைக்கிறார். ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவத்தால், ஓஜஸ் கம்பீரா மும்பையை விட்டு வெளியேறுகிறார். அவர் சென்ற பிறகு, ஓமி (எம்ரான் ஹாஷ்மி) மும்பைக்குள் நுழைந்து கம்பீரா தொடர்புடைய மக்களைக் கொல்கிறார். இதனால் நிலைமை பதற்றமாக  ஓஜஸ் கம்பீரா மீண்டும் மும்பைக்கு வரும் நிலை ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

படம் எப்படி?

சமீபகாலமாக இந்திய சினிமாவில் ஃபேன் பாய் இயக்குநர்கள் தங்களுக்கு மிக பிடித்தமான நடிகர்களை வைத்து மாஸான காட்சிகளுடன் ஒரு படத்தை இயக்கி வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சுஜித் பவன் கல்யாணுக்கு சுடச்சுட விருந்து வைக்கும் அளவுக்கு “OG” படத்தை இயக்கியுள்ளார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த படத்தின் கதை ரொம்ப எளிமையானது.

முன்னதாக தான் இயக்கிய சாஹோ படத்தை கொஞ்சம் மாற்றி மாஃபியா பின்னணியில் ஓஜி ஆக உருவாக்கியுள்ளார். அந்த படத்தில் திரைக்கதையில் செய்த தவறை இதில் செய்யாமல்  சுஜீத்  மிகவும் கவனமாகத் திட்டமிட்டிருப்பது தெரிகிறது. பவன் கல்யாணைச் சுற்றி தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

தியேட்டரில் பார்க்கலாமா?

தனது சீரியஸ் மற்றும் ஸ்டைலான ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களுக்கு பவன் கல்யாண் விருந்து படைத்திருக்கிறார். பேமிலி ஆடியன்ஸை  மகிழ்விக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரியங்கா மோகனுடனான காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. சுஜித்தின் கேங்ஸ்டர்  காட்சிகளுக்கு இசையமைப்பாளர் தமன்  பின்னணி இசையை சூப்பராக அமைத்திருக்கிறார்.

படம் முதல் பாதியில் தொடங்கி முடிவு வரை விறுவிறுப்பாக உள்ளது.  அங்கொன்றும் இங்கொன்றுமாக வேகம் குறைந்தாலும் அதனை கவனிக்காத வகையில் பிற காட்சிகள் அமைந்துள்ளது. சுஜீத் எழுதிய ஒவ்வொரு காட்சியிலும், பவன் கல்யாண் மேல அவருக்கு இருக்கும் அன்பு, தனக்கு பிடித்த ஹீரோவை, திரையில் அவர் எப்படிக் காட்ட வேண்டுமென நினைத்தாரோ அதைவிட பல மடங்கு சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்..   இதுவரைக்கும் பவன் கல்யாண் கேரியரில் அவரை இவ்வளவு சிறப்பாக யாரும் காட்டியதில்லை என சொல்லலாம். நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு தியேட்டர் விருந்து என சொல்லலாம்.