Arulvaan: அருள்நிதியின் ‘அருள்வான்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா!
Arulnithis Arulvaan Movie Trailer : தமிழ் மக்கள் மத்தியில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, நடித்து பிரபலமானவர் அருள்நிதி. அந்த விதத்தில், இவரின் நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் படம்தான் அருள்வான். இப்படம் வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி (Arulnithi). இவர் தொடர்ந்து திரைப்படங்களை கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக “ராம்போ” (Rambo) என்ற படமானது வெளியாகியிருந்தது. இயக்குநர் முத்தையா (Muthiah) இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் உருவான இப்படம் நேரடியாக சன்நெஸ்ட் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது அருள்நிதிக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்கவில்லை என கூறலாம். இருந்தாலும், தனது நடிப்பை விடாமல் தொடர்ந்து புது படங்களை கொடுத்துவருகிறார். இந்நிலையில் இவர் தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் அருள்வான் (Arulvaan). இதை இயக்குநர் கணேஷ் விநாயகன் (Ganesh Vinayakan) இயக்க, சக்தி பிலிம்ஸ் பேக்டரி என்ற நிறுவனமானது சிறப்பாக தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ஏற்கனவே இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியிருந்தது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லரை இன்று (06/07/2026) நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்
அருள் நிதியின் அருள்வான் திரைப்பட ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Happy to share the trailer of #Arulvaan.
Wishing the film & its team great success. https://t.co/yfFDbJn4my#Arulvaanfromjuly17@arulnithitamil @Aravoffl@iamramyapandian @gvprakash @dopmsukumar @SakthiFilmFctry— Suriya Sivakumar (@Suriya_offl) July 6, 2026
அருள்நிதியின் அருள்வான் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த படமானது ஒரு மலை கிராமத்து பழங்குடியின சிறுமி, தனக்கு கல்வி வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காக அவர் கலெக்டராக இருக்கும் அருள்நிதியை சந்திக்கிறார். அவரின் தனது பழங்குடியின கிராமத்தின் முதல் கல்வியை பெரும் சிறுமியாகவும், தனது கிராம மக்களை விவரம் தெரிந்து காப்பாற்ற நினைக்கும் சிறுமியாகவும் கிருத்திகா நடித்துள்ளார். மேலும் அவரின் தாய் தந்தையாக ரம்யா பாண்டியன் மற்றும் ஆரவ் இருவரும் நடித்துள்ளனர். மலை கிராமத்து பழங்குடியினர்களின் பின்னணி, உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
அருள்வான் படத்தின் நடிகர்கள் :
இந்த படத்தில் அருள்நிதி மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் பிக் பாஸ் புகழ் நடிகை ரம்யா பாண்டியன், ஆரவ் மற்றும் மௌனராகம் சீரியலில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் கிருத்திகா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக சசிகுமார்? – வைரலாகும் தகவல்!
இந்த படமானது கல்வி மற்றும் ஏழ்மையான விவசாயி குடும்பம் என்ற கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியோடு வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.