சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இது.. இப்போ ஆளே மாறிட்டாங்க பாருங்களே!
Siruthai Movie child Artist: நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த தமிழ் படம் என்றால் அது சிறுத்தை என கூறலாம். இப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த சிறுமி ரக்ஷனா. இவர் குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடித்து பிரபலமான நிலையில், இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?. புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் இதோ.
தமிழில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் (Siruthai Siva) இயக்கத்தில், கார்த்தி (Karthi) நடித்திருந்த திரைப்படம்தான் சிறுத்தை (Siruthai). கடந்த 2011ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் மூலமாகவே இயக்குநர் சிவாவுக்கு சிறுத்தை சிவா என்ற பெயரே வந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் கார்த்தி ராக்கெட் ராஜா மற்றும் ரத்னவே பாண்டியன் என இரு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது 2011ம் ஆண்டில் வெளியாகி கார்த்திக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதில் கார்த்தி நடித்திருந்த ரத்னவேல் பாண்டியனின் மகளாக நடித்திருந்த குழந்தை நட்ச்சத்திரம் தான் ரக்ஷனா (Rakshana). சிறுத்தை படத்தில் திவ்யா என்ற வேடத்தில் அவர் நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலமாகவே இவர் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த நிலையில், மேலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், பேபி ரக்ஷனா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?. அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் சார் ஒரு சிறந்த இசை ரசனையாளர் – சாய் அபயங்கர்
குழந்தை நட்சத்திரமாக நடித்த ரக்ஷனாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
பேபி ரக்ஷனா தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என கூறலாம். சிறுத்தை படத்தில் குழந்தையாக பார்த்த இவர், தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்டார். இவர் தற்போது இவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ரக்ஷனா தற்போது பரதநாட்டிய கலைஞராக இருந்துவருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படங்கள் மற்றும் பரதநாட்டிய பயிற்சி தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் ரவிமோகன் சார்தான் காரணம் – பிரதீப் ரங்கநாதன்
பேபி ரக்ஷனா நடித்திருந்த தமிழ் படங்கள் :
ரக்ஷனா தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த நிலையில், இப்படத்தை அடுத்தாக கடல், ஓ காதல் கண்மணி, பாண்டிய நாடு மற்றும் த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் பாண்டிய நாடு படத்தில் விஷாலின் அண்ணன் மகளாக அதிகம் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார். இதன் பிறகு அவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை . தற்போது பரதநாட்டிய கலைஞராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.