AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எல்லா பெரிய விஷயங்களுக்கும் ஆரம்பம் சின்ன இடம்தான்… மாஸாக குட்டி ஸ்டோரி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

Pradeep Ranganathan Kutty Story: தமிழில் இளம் நாயகனாக நடித்து அசத்திவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்ட நிலையில், அதில் ரசிகர்களுக்கான மோட்டிவேஷன் குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார்.

எல்லா பெரிய விஷயங்களுக்கும் ஆரம்பம் சின்ன இடம்தான்… மாஸாக குட்டி ஸ்டோரி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jul 2026 15:34 PM IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது முன்னணி நாயகனாக படங்களில் நடிக்க தொடங்கியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் மொத்தமாக 4 படங்கள் வெளியாகியுள்ளது. இவர் ரவி மோகனின் (Ravi Mohan) கோமாளி (Comali) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்து, பின் அவரின் இயக்கத்திலே லவ் டுடே என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு பின், தொடர்ந்து வெளியான 2 படங்களும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், அதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது.

ஆனால் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. தற்போது பிரதீப் ரங்கநாதன் தனது இயக்கத்தில், தானே மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் இவருக்கு டியூட் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருது கிடைத்திருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய அவர், ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி ஒன்றை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த ரெண்டு படமும் ஒரே நேரத்தில் நடிச்சேன் – நயன்தாரா சொன்ன விஷயம்!

ரசிகர்களுக்காக பிரதீப் ரங்கநாதன் சொன்ன அட்வைஸ் குட்டி ஸ்டோரி:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “நம்முடைய ஆரம்ப புள்ளியை நினைத்து நாம் என்றுமே வெட்கப்பட தேவையில்லை. ஏனென்றால் எல்லா பெரிய வெறுக்கும் ஆரம்ப இடம் சிரியதாகத்தான் இருக்கும்” என அதில் அவர் சிம்பிளாக குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரதீப் ரங்கநாதன் சொன்ன குட்டி ஸ்டோரி குறித்து இணையத்தில் வைரலாகிவரும் எக்ஸ் பதிவு:

பிரதீப் ரங்கநாதனின் புது படம்:

பிரதிபெ ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு பின் புதிய படத்திற்கான கதை எழுதும் பணிகளில் இருக்கிறார். இவர் தனது புது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளாராம். இதை டிராகன் மற்றும் லவ் டுடே போன்ற படங்களை தயாரித்திருந்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

இதையும் படிங்க: அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும் – தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு

மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளாராக புது படத்தை உருவாக்கிவருகிறாராம். இதில் அஸ்வத் மாரிமுத்து மற்றும் மமிதா பைஜூ முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us