AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG ODI Series: 3 போட்டிகள்.. 16 வீரர்கள்! ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! முதல் போட்டி எப்போது?

England vs India Odi Series 2026: இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூலை 19ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 ஜூலை 16ம் தேதியும் நடைபெறும். இங்கிலாந்து அணியை ஹாரி புரூக் வழிநடத்துவார். அதேநேரத்தில், இந்திய அணிக்கு சுப்மன் கில் தலைமை தாங்குவார்.

IND vs ENG ODI Series: 3 போட்டிகள்.. 16 வீரர்கள்! ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! முதல் போட்டி எப்போது?
ஹாரி ப்ரூக் - சுப்மன் கில்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Jul 2026 16:33 PM IST

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான டி20ஐ தொடர் (England – India T20i Series 2026) தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி இன்று அதாவது 2026 ஜூலை 4ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து அணியிடமிருந்து ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு (Indian Cricket Team) எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளது.

ALSO READ: பொறுமையை இழந்த பிசிசிஐ.. இந்த வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கம்!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்:


இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூலை 19ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 ஜூலை 16ம் தேதியும் நடைபெறும். இங்கிலாந்து அணியை ஹாரி புரூக் வழிநடத்துவார். அதேநேரத்தில், இந்திய அணிக்கு சுப்மன் கில் தலைமை தாங்குவார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும் பிரதான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் அடங்குவர்.

இங்கிலாந்து-இந்தியா ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதல் போட்டி – 2026 ஜூலை 14, எட்ஜ்பாஸ்டன், பிற்பகல் 3:30 மணி
  • 2வது போட்டி – 2026 ஜூலை 16, கார்டிஃப், மாலை 5:30 மணி
  • 3வது மற்றும் கடைசி போட்டி – 2026 ஜூலை 19, லார்ட்ஸ், மாலை 3:30 மணி.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஹாரி புரூக் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கரண், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், ஜோ ரூட் மற்றும் ஜோஷ் டங்.

ALSO READ: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி எப்போது? முழு விவரம் இதோ!

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா.

Follow Us