AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை பட பாணியில் உருவாகும் ராஜன் வகையறா? – வைரலாகும் தகவல்!

Vetrimaarans Rajan Vagaiyara: வெற்றிமாறனின் இயக்கத்தில் 2018ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்த படம் வட சென்னை. இப்படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை பட பாணியில் உருவாகும் ராஜன் வகையறா? – வைரலாகும் தகவல்!
அமீர், வெற்றிமாறன் மற்றும் கிஷோர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 May 2026 10:44 AM IST

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவரும் நிலையில், இறுதியாக விடுதலை 2 படம் (Viduthalai 2) வெளியானது. இதையடுத்து வட சென்னை (Vada Chennai) டைம் லைனில் அரசன் (Arasan) என்ற படத்தை இவர் இயக்கிவரும் நிலையில், இப்படத்தில் சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் வட சென்னை படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் அமீர் (Ameer).

வட சென்னை பின்னணியின் ராஜன் (அமீர்) கதாபாத்திரத்தை மையமாக கொண்டு புதிய படத்திற்கு தயாராகிக்கொள்ளுங்கள் என வெற்றிமாறன் தன்னிடம் சொன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் “ராஜன் வகையறா” (Rajan Vagaiyara) படம் உருவாகவுள்ளது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதை எப்படி இருக்கு என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘கல்கி 2’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!

ராஜன் வகையறா திரைப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் :

அமீரின் கதாபாத்திரத்தய் மையமாக கொண்டு தயாராகவுள்ள ராஜன் வகையார் படம், ராஜன் மற்றும் அவரின் ரௌடி கும்பலை சுற்றிய கதையில் இருக்கும். இதில் ராஜனின் 16 வயது முதல் 26 வயது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் அவரின் வாழ்க்கையில் நடந்த மாற்றம், வட சென்னையின் ரௌடியாக காரணம் என்பது பற்றி இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ராஜனின் சிறுவயது கதாபாத்திரத்தில், நடிகர் கென் கருணாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதிக்கு விசில் போடே.. ஜன நாயகன் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்?

மேலும் இதில் அமீர் வளர்ந்த ராஜனாகவும், ராஜனின் தந்தையாகவும் ரெட்டை வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் ராதா ரவி போன்ற பிரபலங்களின் சிறுவயது கதாபாத்திரங்களும் இப்படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படமானது அரசன் திரைப்படத்தை போலவே வட சென்னை பட யூனிவர்சில் ஒரு சிறப்பான கதையாக உருவாகும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ராஜன் வகையறா திரைபடம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

அரசன் படத்தை போலவே ராஜன் வகையறா படமும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் வெற்றிமாறன் சூர்யாவுடன் வாடிவாசல் படம் பண்ண உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷுடன் வட சென்னை 2 படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜன் வகையார் படமானது எப்போது உருவாகும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us