AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sardar 2: கார்த்தியின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்து வாழ்த்திய சர்தார் 2 படக்குழு!

Karthis 49th Birthday: தென்னிந்திய மக்கள் மத்தியில் பரிட்சயமான நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருகிறார். இன்று 2026 மே 25ம் தேதியில் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், பிறந்தநாளை ஸ்பெஷல் போஸ்டரை சர்தார் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.

Sardar 2: கார்த்தியின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்து வாழ்த்திய சர்தார் 2 படக்குழு!
சர்தார் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 May 2026 12:00 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தொடர்நது தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவரும் நிலையில், தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் வா வாத்தியார் (Vaa vaathiyaar). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இப்படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்து தொடர்ந்து புது புது படங்களில் கார்த்தி ஒப்பந்தமாகிவந்தார். அதில் பி.எஸ்.மித்ரன் (PS. Mithran) இயக்கத்தில் கார்த்தி நடித்துவந்த திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இப்படமானது 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 படத்தின் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது ஸ்பை திரில்லர் மற்றும் நாட்டிற்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகதான் சர்தார் 2 படம் தயாராகிவரும் நிலையில், பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துவருகிறது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு மே 25ம் தேதியில், நடிகர் கார்த்தி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை சர்தார் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘கல்கி 2’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!

கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டரை வெளியிட்ட சர்தார் 2 படக்குழு:

சர்தார் 2 திரைப்படமானது முற்றிலும் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருடன் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராஜீஷா விஜயன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே நிறைவடைந்த நிலையில், இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

இதையும் படிங்க: ஒரு ஆக்ஷன் ரோல் கிடைப்பது மிகவும் அறிய வாய்ப்பு – பிளாஸ்ட படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ப்ரீத்தி முகுந்தன்!

இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு பிறகு கார்த்தி நடித்துவரும் மார்ஷல் படமானது 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளதாக இயக்குநர் தமிழ் அறிவித்திருந்த நிலையில், அதற்க்கு முன் சர்தார் 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us