AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karthi: நா லவ் பண்ணக்கூடாதுனு வீட்ல மிரட்டுனாங்க.. நடிகர் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Karthi About His Love Life: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருப்பார் கார்த்தி. இவரின் நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனது வீட்டில் லவ் பண்ணக்கூடாது என மிரட்டிய விஷயம் குறித்து கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

Karthi: நா லவ் பண்ணக்கூடாதுனு வீட்ல மிரட்டுனாங்க.. நடிகர் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
நடிகர் கார்த்திImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Apr 2026 08:46 AM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கிலும் படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் நானி (Nani) நடித்திருந்த ஹிட் 3 (HIT 3) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஹிட் 4 படத்தில் இவரே லீட் நாயகனாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார் என கூறப்படுகிறது. இவரின் அண்ணா சூர்யா ஏற்கனவே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து கார்த்தியும் இதுபோன்ற படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இதுவரைக்கும் 25க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் தமிழில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது.

இந்த படத்தை அடுத்ததாக சர்தார் 2 (Sardar 2) மற்றும் மார்ஷல் (Marshal) போன்ற படங்களில் கார்த்தி நடித்துள்ளார். இந்த படங்களும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த கார்த்தி, தனது வீட்டில் லவ் பண்ணக்கூடாது என மிரட்டிய விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கு சிறுவன் யார் தெரியுமா? சீரியல் மூலம் சினிமாவில் நுழைந்த நடிகர்!

லவ் குறித்து தனது வீட்டில் பெற்றோர்கள் சொன்னது பற்றி பகிர்ந்த கார்த்தி:

அந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், “எனது வீட்டில் அம்மா என்னிடம், “லவ் லா பண்ணக்கூடாது. யாரையாச்சும் லவ் பண்ணுறேன்-னு வீட்டிற்கு கூட்டிட்டு வந்திடாத, கல்யாணம் பண்ணிவைக்க முடியாதுனு” சொன்னாங்க. அதற்கு பிறகு கிட்டத்தட்ட 6 வருடத்திற்கும் மேலாக எனக்கு பெண் தேடினார்கள், அதில் ஆறாவது வருடம் வரும்போது அவர்களே சோர்வாகி, யாரையாச்சும் லவ் பண்ணுறியா?, சொல்லு கல்யாணம் செஞ்சி வைக்கலாம், உனக்கு யாரையுமே பொண்ணு தரமாட்டுறாங்கனு சொன்னாங்க.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – சிபி சக்ரவர்த்தி கூட்டணி கைவிடப்பட இதுதான் காரணமா?

உடனே அவர்களிடம் நான், இதை நீங்க ஆரம்பத்திலே சொல்லியிருந்தால், யாரையாச்சும் லவ் பண்ணிருப்பேன். இப்போது வந்து சொல்லுறீங்க லவ் பண்ணுனு, நான் யாரை தேடுவது என சொன்னேன். அந்த வகையில் காதல் என்பது எனது வாழ்க்கையில் நடக்காத ஒன்று” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் கார்த்தியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

நடிகர் கார்த்தியின் கைவசத்தில் கிட்டத்தட்ட இரு படங்கள் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கிறது. இயக்குநர் பிஎஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படமானது வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் மார்ஷல் படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us