AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pandiraj: பசங்க 3 பண்ணனு ஆசை.. ஸ்கிரிப்ட் ரெடி – அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

Director Pandiraj Confirmed Pasanga 3 : தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான இயக்குநர்தான் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ என்ற படமானது தயாராகியுள்ள நிலையில், அதன் விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், பசங்க 3 படத்தை எடுப்பதை உறுதிசெய்துள்ளார்.

Pandiraj: பசங்க 3 பண்ணனு ஆசை.. ஸ்கிரிப்ட் ரெடி – அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!
இயக்குனர் பாண்டிராஜ் பசங்க 3 படத்தை உறுதி செய்துள்ளார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 May 2026 16:08 PM IST

இயக்குநர் பாண்டிராஜ் (Director Pandiraj)இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இதில் விஜய் சேதுபதி (Vijay sethupathi) மற்றும் நித்யா மேனன் இருவருமே இணைந்து நடித்திருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு வெற்றி படமாக அமைய, கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் பரிமளா அண்ட் கோ (Parimala And Co). இதில் ஜெயராம் (Jayaram), ஊர்வசி (Urvashi), சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், மிஷ்கின் மற்றும் பூர்ணிமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பேமிலி ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2026 ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமான நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ் பசங்க 3 (Pasanga 3) படம் இயக்கவுள்ளதாக உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பசங்க 3 படத்தை இயக்குவதாக உறுதிசெய்த இயக்குநர் பாண்டிராஜ்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் பாண்டிராஜ் அதில், “எனக்கு ஒரு ஆசை, எது என்னவென்றால் பசங்கள் இந்த காலத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று படம் எடுக்கவேண்டும் என ஆசை. அதற்கு ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடியாக வைத்திருக்கிறேன். அதை வெப் சீரியஸாக பண்ணலாமா?, அல்லது திரைப்படமாக பண்ணலாமா? என யோசித்துவருகிறேன், ஸ்கிரிப்ட் எல்லாமே இருக்கு.

இதையும் படிங்க: கட்டா குஸ்தி 2 படத்தில் இணைந்த கருணாஸ்.. நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அந்த படம் பண்ணவேண்டும் என ஆசை, அதுவும் பசங்க திரைப்படத்தை போலவே நல்ல இருக்கும். அந்த படத்திலும் விமல் இருப்பாரு, வேகா கதாபாத்திரம் இருக்கும். பசங்க படத்தில் சிறு குழந்தையாக இருந்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ஒரு படம் பண்ணனும்-னு ஆசை. அந்த படம் எதுக்கு என ஆசை. கண்டிப்பாக பசங்க 3 படம் வரும்-னு உறுதி பண்ணிக்கலாம். அதை படமாகவோ அல்லது வெப் தொடராகவோ கட்டாயம் பண்ணுவேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.

பசங்க 3 திரைப்படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசிய தொடர்பான வீடியோ பதிவு:

பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், 2026 ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us