AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: சூர்யாவின் கெரியரிலே அதிக வசூல்.. உலகமெங்கும் 15 நாட்களில் கருப்பு படம் வசூல் இத்தனை கோடியா?

Karuppu Box Office Storm: தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் 45வது திரைப்படமாக வெளியாகியிருந்ததுதான் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், சூர்யா இதில் கருப்பசாமியாக நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் வெறியாட்டமாக வெளியாகிவருகிறது. இந்நிலையில் 15 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவிப்பு.

Karuppu: சூர்யாவின் கெரியரிலே அதிக வசூல்.. உலகமெங்கும் 15 நாட்களில் கருப்பு படம் வசூல் இத்தனை கோடியா?
கருப்பு திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 May 2026 19:38 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) 45வது திரைப்படமாக கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் வெளியாகியிருந்த படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் நடிகர் சூர்யா கருப்பசாமியாக நடிக்க, அவருடன் மிக முக்கிய வேடத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காம்போ கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தத்க்கது. இப்படமானது அதிரடி ஆக்ஷன், தெய்வீகம் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், இதில் அவர் முக்கிய வில்லனாகவும் நடித்திருந்தார்.

இப்படமானது முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் படமாக வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இதற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் ஒவ்வொன்று தெறிக்கவிட்டு வருகிறது. இப்படம் இன்று 2026 மே 29ம் தேதியோடு வெளியாகி 15வது நாட்களை கடந்த நிலையில், உலகமெங்கும் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதம் சூர்யா படத்துடன் போட்டிப் போடும் பிரபல நடிகர்களின் படங்கள் – லிஸ்ட் இதோ

15 நாட்களில் கருப்பு படத்தின் உலகளாவிய வசூல் விவரம்:

கருப்பு படமானது மே 15ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்தது. வெளியான 3வது நாளிலே கிட்டத்தட்ட ரூ 30 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இதையும் படிங்க: பாபநாசம் பட பாணியில்… ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

அந்த வகையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில், உலகமெங்கும் மொத்தம் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலே, இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்து, பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படமாக கருப்பு படம் அமைந்துள்ளது.

கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலே தமிழகத்தில் மட்டுமே ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்த எந்த படமும் இல்லை. அதுபோல ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்த எந்த படமும் இல்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் கருப்பு படமே ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து, சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us