ஆகஸ்ட் மாதம் சூர்யா படத்துடன் போட்டிப் போடும் பிரபல நடிகர்களின் படங்கள் – லிஸ்ட் இதோ
August Month Movies Release List Here | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் லிஸ்ட் இதோ.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கருப்பு என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனை படக்குழுவினரும் சூர்யாவின் ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில் சூர்யா ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் தற்போது அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தின் வெளியீடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் மட்டுமே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது. அதன் பட்டியளை தற்போது பார்க்கலாம்.
ஐ அம் கேம்: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக மலையாள சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த RDX என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Lokesh Kanagaraj: காட்டாளன் படத்தில் கேமியோ வேடத்தில் லோகேஷ் கனகராஜ் – போஸ்டரை பகிர்ந்த படக்குழு!




தி பாரடைஸ்: நடிகர் நானி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள நிலையில் பிரபல இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கலிஃபா: நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ரிவெஞ்ச் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் கலிஃபா. இந்தப் படத்தினை இயக்குநர் வைசாக் எழுதி இயக்கி உள்ளார். கேரளாவில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் படம் வருகின்ற 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… திரைப்பட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் மரணம் – திரையுலகினர் சோகம்