ரீ ஷூட்டிங்கில் ஜெயிலர் 2 படக்குழு – எப்போது படம் வெளியாகும்?
Jailer 2 Movie Re Shooting Update | தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த ஜெயிலர் 2 படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்படுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மொழி அறிந்த அனைத்து நாடுகளிலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் 50 வருடங்களைக் கடந்து தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதன்படி வருடத்திற்கு ஒரு படம் என்ற அடிப்படையில் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் ரீ ஷூட்டிங் தற்போது தொடங்கி உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




ரீ ஷூட்டிங்கில் ஜெயிலர் 2 படக்குழு:
ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தின் சில காட்சிகள் தற்போது மீண்டும் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு அட்டவணையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இப்படத்தை தீபாவளி பண்டிகையின்போது வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இப்படத்தின் காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இப்பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கான காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளன. தீபாவளி சமயத்தில் இப்படத்தை வெளியிடுவது சிறப்பானதாக இருக்கும் என்று படக்குழு கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The film being made by the #Rajinikanth–#Nelson collaboration is currently undergoing reshoots for some scenes. Due to the delay in the film’s shooting schedule, it is said that the team is planning to release the film for Diwali.
The film’s scenes have been undergoing reshoots…
— Movie Tamil (@_MovieTamil) June 17, 2026
Also Read… Arya: அது ஒரு சோதனை முயற்சி.. கருப்பு படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கம் குறித்து ஆர்யா பேச்சு!