AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேசில் ஜோசஃபின் அதிரடி படம் நிஜமாவே அதிரடியா இருக்கா? ஓடிடி விமர்சனம் இதோ

Athiradi Movie OTT Update | மலையாள சினிமாவில் இயக்குநர், நாயகன் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் நடிகர் பேசில் ஜோசஃப். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற அதிரடி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பேசில் ஜோசஃபின் அதிரடி படம் நிஜமாவே அதிரடியா இருக்கா? ஓடிடி விமர்சனம் இதோ
அதிரடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2026 22:15 PM IST

மலையாள சினிமாவில் பிரபலமாக வலம் வருபவர் பேசில் ஜோசஃப். இவரது நடிப்பில் கடந்த 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது அதிரடி படம் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் டொவினோ தாமஸ், பேசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு, ஜரின் ஷிஹாப், ஷான் ரஹ்மான், விஷ்ணு அகஸ்தியர், பி.சுகுமார், ஷெல்வின் ஜேம்ஸ், அர்ஷா ஜெயராம், ஷெர்ஷா ஷெரீஃப், டிஸ் தாமஸ், ஜியோ பேபி, வினீத் தட்டில் டேவிட், ரீனா இந்திராணி, நியாஸ் பேக்கர், சிவம் குப்தா, ஹரிஹரன், சூரியநாராயணன், யாதுகிருஷ்ணன், ஆரியன், சரத் ​​வேதி, சோனு சுரேந்திரன், கங்கா மீரா, ரினி.கே.ராஜன், நிருபமா தாமஸ், திவ்யா ஏபி, அபின் ஜான், ராஜ்குமார் ஆர். அரவிந்த் எஸ்.கே. ஆரோமல் தேவராஜ், அதுல் சிங், கண்ணன் நாயர், சந்திவில தினேஷ், மகேஷ் குஞ்சுமோன், அன்னமியா ஆண்டனி, சிவதாஸ் கண்ணூர், நிதின் பரமேஸ்வர், கிரண் பீதாம்பரன், அஸ்வதி சந்திர கிஷோர், மனோஜ் கின்னஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போதே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை இயக்குநர் அருண் அனிருதன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான பேசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட் மற்றும் டாக்டர் ஆனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரித்து உள்ளது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பேசில் ஜோசஃபின் அதிரடி படத்தின் கதை என்ன?

பேசில் ஜோசஃப் தனது அண்ணன் படித்த கல்லூரியில் சேர்கிறார். அண்ணன் படித்த போது அவரது பொறுப்பில் நடைப்பெற்ற ஆரோஹன் என்ற இண்டர் காலேஜ் கல்லூரி விழாவில் கூட்ட நெறிசல் ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த ஆரோஹன் விழாவை நடுத்த தடை செய்கின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக தடை செய்யபட்டு இருந்த ஆரோஹன் விழாவை தனது கல்லூரியின் இறுதி ஆண்டில் நிர்வாகத்திடம் இருந்து அனுமதியைப் பெறுகிறார்.

Also Read… தலைவர் 173 படத்தின் டைட்டில் இதுதானா? சும்மா கெத்தா இருக்கே!

அந்த விழாவில் வினீத் ஸ்ரீனிநாவசனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் போதே கல்லூரியின் அருகே உள்ள கோவிலில் விழா ஒன்று நடைப்பெற்று வருகின்றது. அந்த விழாவில் உள்ளவர்களிடம் மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அது பெரிதாகி அந்த திருவிழா நடத்தும் டொவினோ தாமஸிற்கும் பேசில் ஜோசஃபிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பணியாளரை அடைத்து வைத்தாரா? நகைகள் திருடப்பட்டதாக ரவி மோகன் புகார் – என்ன நடந்தது?

Follow Us