Trisha: எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த நடிகை திரிஷா!
Trishas Viral Birthday Wish to CM Vijay: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் இன்று (23/06/2026), தமிழக முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யுடன், கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகியாக கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேல் இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில், தமிழ் முதல் மலையாளம் வரை பான் இந்திய மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கருப்பு (Karuppu). இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் நடிகை திரிஷா ஒவ்வொரு வருடமும் முதல்வரும், முன்னாள் தமிழ் சினிமாவின் நடிகருமான தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து (CM Vijay Birthday) கூறி, புகைப்படங்களுடன் பதிவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நேற்று 2026ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியில், தளபதி விஜய் (Thalapathy Vijay) தனது 52வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருந்தார்.
அந்த வகையில் நடிகை திரிஷா வாழ்த்தி பதிவை வெளியிடுவார் என பலரும், ஆவலுடன் எதிர்பாராத நிலையில், அவர் எந்த பதிவு மற்றும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எதையும் வெளியிடவில்லை. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியில், முதல்வர் விஜய்யுடன், அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் அமைதியாகவும் அதிகம் பேசாதவராகவும் மாற அதுதான் காரணம் – தாய் ஷோபா சந்திரசேகர் ஓபன் டாக்!
முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாளை கொண்டாடியது தொடர்பாக திரிஷா கிருஷ்ணன் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை திரிஷா கிருஷ்ணன், “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்து” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு, அவரின் ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவிவருகிறது. மேலும் திரிஷாவின் பதிவின் கீழ் பலரும், இந்த பதிவிற்காக காத்திருந்ததாகவும், பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார்த்தியின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது – விஷ்ணு விஷால் சொன்ன உண்மைச் சம்பவம்
முதல்வர் விஜய், நேற்று (22/06/2026) தனது பிறந்தநாளிலும் சட்டசபையில் கலந்துகொண்டிருந்த நிலையில், அதில் பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் முதல்வர் விஜய்க்கு, சினிமாவில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முதல் ராகவா லாரன்ஸ் வரை பல்வேறு பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் தங்களின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருந்தனர். அவரின் 52வது பிறந்தநாள் எந்தவித படங்களின், அப்டேட், பாடல்கள் மற்றும் டீசர் இல்லாமல் ஒரு அரசியல் பிரபலமாகவே கொண்டாடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.