AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைவர் 173 படத்தின் டைட்டில் இதுதானா? சும்மா கெத்தா இருக்கே!

Thalaivar 173 Movie Title Update | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் தலைவர் 173. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். இந்த நிலையில் இன்று படத்தின் தலைப்பு என்ன என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தலைவர் 173 படத்தின் டைட்டில் இதுதானா? சும்மா கெத்தா இருக்கே!
தர்மன்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2026 10:28 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாடுகளிலும் உள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருப்பது தலைவர் 173 படத்தின் அப்டேட்டிற்காகதான். தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஜெயிலர் 2 படம். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் 173-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது. அதில் ரஜினிகாந்தின் 173-வது படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னதாக இயக்குநர் சுந்தர் சி அந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பிறகு அவர் விலகின்றார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு தெலுங்கு சினிமாவில் சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தமான படம் பாதியில் நின்றதால் அந்தப் படத்தை முடிக்கும்வரை வேறு எந்த படத்தையும் அவர் இயக்க முடியாத மாதிரி அந்த தயாரிப்பு நிறுவனம் சிபி சக்ரவர்த்திக்கு ஒரு கிடுக்குப்பிடி போட்டது. இதன் காரணமாக அவர் இந்தப் படத்தில் இருந்து விலகியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.

தலைவர் 173 படத்தின் டைட்டில் இதுதானா? சும்மா கெத்தா இருக்கே!

இந்த நிலையில் பல இயக்குநர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வந்த நிலையில் இன்று தலைவர் 173 படக்குழு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி தலைவர் 173 படத்தை பிரபல இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த தலைவர் 173 படத்திற்கு படக்குழு தர்மன் என்று பெயர் வைத்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… சென்னை வந்த பிரபல பாலிவுட் நடிகர்… ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நாயகன் கேமியோ கன்ஃபார்மா?

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விரைவில் வெளியாகும் அஜித் குமார் 64 படத்தின் அப்டேட் – வைரலாகும் தகவல்

Follow Us