AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gatta Kusthi 2: ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆர்மி அசெம்பிள்.. கட்டா குஸ்தி 2 பட 3வது பாடல் வெளியீடு!

Gatta Kusthi 2 Movie Third Single: இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், வேல்ஸ் நிறுவன ஐசரி கே கணேஷின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. தற்போது இப்படத்திலிருந்து ஹவுஸ் ஹஸ்பெண்ட் என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Gatta Kusthi 2: ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆர்மி அசெம்பிள்.. கட்டா குஸ்தி 2 பட 3வது பாடல் வெளியீடு!
ஹவுஸ் ஹஸ்பண்ட் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Jun 2026 18:18 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமிக்க நடிகர்களின் வரிசையில் ஒருவராக இடம்பெற்றிருப்பவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் வெளியான “வெண்ணிலா கபடி குழு” (Vennila Kabadi Kuzhu) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்த இவர், இதையடுத்து தொடர்ந்து புது புது படங்களில் நடிக்க தொடங்கினார். தனது முதல் படமே இவருக்கு வரவேற்பை கொடுக்க, அடுத்தடுத்த படங்களில் நடித்து மேலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வரிசையில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள முதல் படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இதை இயக்குநர் செல்லா அய்யாவு (Director Chella Ayyavu) இயக்க, ஷான் ரோல்டன் (Sean Roldan) இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) ஜோடியாக நடித்துள்ளார்.

2022ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதையில், கட்டா குஸ்தி 2 படமும் உருவாக்கப்பட்டுள்ளது. தெப்போது இப்படத்திலிருந்து “ஹவுஸ் ஹஸ்பெண்ட்” என்ற மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: அப்படி ஒருவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. திருமணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி!

கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட ஹவுஸ் ஹஸ்பெண்ட் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த கட்டா குஸ்தி 2 படமானது பேமிலி பொழுதுபோக்கு மற்றும் அப்பா மகள் குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் விஷ்ணு விஷால் வீட்டுவேலை பார்க்கும் கணவனாகவும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி குஸ்தி போட்டியில் கலந்துகொள்ளும் அதிரடி மனைவியாகவும் நடித்துள்ளார். மேலும் இது பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு வெளியிட்ட சென்சார் அப்டேட் இதோ!

கட்டா குஸ்தி 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பார்ட் 2 படங்களில் ஒன்று என கூறலாம். இதற்க்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3 பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படமானது பேமிலி எண்டெர்டைனர் மற்றும் குஸ்தி போட்டியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இதற்கு சென்சார் குழு யு தரச் சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி அனைத்து வயதினரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us