AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நாயகியை மையமாக வைத்து வெளியாகும் படங்கள்

Female Lead Box Office Rampage | தென்னிந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தப் படங்களின் லிஸ்டை தற்போது பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நாயகியை மையமாக வைத்து வெளியாகும் படங்கள்
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jul 2026 19:09 PM IST

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலையாள சினிமாவில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்த இந்தப் படம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் வெளியானது. இந்தப் படம் சுமார் 300 கோடிகள் வரை உலக அளவில் வசூல் செய்து சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தின் அடுத்தடுத்து மொத்தம் 5 பாகங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் சுமார் 90 கோடிகள் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கதாநாயகி தலைமையிலான படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனை வேட்டை:

இந்த நிலையில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு மொழியில் வெளியான மா இண்டி பங்காரம் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகை சமந்தா ரூத் பிரபு இந்தப் படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்தப் படத்தையே நாயகியாக மையமாக வைத்து உருவான படத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் நாயகிகளின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வேட்டை நடத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… கத்தி படத்தில் அந்த பாடலை வைக்காததற்கு என்ன காரணம்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கபாலி படத்தில் எனக்காக பேசிய ரஜினிகாந்த் சார் – சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்

Follow Us