AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Devi Sri Prasad : நான் எப்போதும் ரீமேக் பாடல்களைப் பண்ணுவதில்லை.. குட் பேட் அக்லி படத்திலிருந்து விலகியது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சு!

Devi Sri Prasad Talk About Remake Songs Use In Movies : பான் இந்திய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரின் இசையமைப்பில் சமீபத்தில் குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தான் பாடல்களை ஒருபோதும் ரீமேக் செய்யமாட்டேன் என்று பேசியுள்ளார்.

Devi Sri Prasad : நான் எப்போதும் ரீமேக் பாடல்களைப் பண்ணுவதில்லை.. குட் பேட் அக்லி படத்திலிருந்து விலகியது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சு!
தேவி ஸ்ரீ பிரசாத்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jun 2025 22:39 PM IST

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad). இவரின் இசையமைப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பான் இந்திய வெற்றிப் படமாக அமைந்ததுதான் புஷ்பா 2 (Pushpa 2) . நடிகர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) முன்னணி நடிப்பில் வெளியாகியிருந்த இந்த படமானது பான் இந்தியா அளவில் சுமார் ரூ.2000ம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைத்திருந்தார். இவர் தமிழில் நடிகர்கள் தளபதி விஜய் (Thalapathy Vijay) , சூர்யா (Suriya) , அஜித் மற்றும் தனுஷ் எனப் பல முன்னணி பிரபலங்கள் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பிலும், இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்திலும் வெளியான குபேரா (Kuberaa)  படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைக்கும் மக்கள் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விஷயமாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தேவி ஸ்ரீ பிரசாத், “தான் ஒருபோதும் படங்களில் ரீமேக் பாடல்களைப்  (Remake songs) பயன்படுத்த விரும்பமாட்டேன்” என்று பேசியுள்ளார். இதுதானா குட் பேட் அக்லி படத்திலிருந்து விலகக் காரணமா எனக் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

குபேரா படம் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by KuberaaMovie (@kuberaathemovie)

ரீமேக் பாடல்கள் குறித்து இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சு

சமீபத்தில் குபேரா திரைப்பட நிகழ்வில் கலந்துகொண்ட தேவி ஸ்ரீ பிரசாத் பேசியதாவது, “நான் படங்களில் ரீமேக் பாடல்களைப் பயன்படுத்த விரும்பவில்லை, அது என்ன கரணம் என்று தெரியவில்லை. எனக்கு அப்படிச் செய்வதற்கு விருப்பமில்லை. இதன் காரணமாக நான் பல படங்களை விட்டிருக்கிறேன். நான் மற்ற இசையமைப்பாளர்களின் படங்களில் ரீமேக் பாடல்கள் இடம் பெறுவது, பற்றி தவறாகக் கூறவில்லை, எனக்கு அவ்வாறு படங்களில் ரீமேக் பாடல்களைப் பயன்படுத்துவது பிடிக்காது.

ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த நல்ல பாடலை, நாம் ரீமேக் செய்து அதைப் படத்தில் பயன்படுத்தும் உரிமை நமக்கு இல்லை. எனக்குப் படங்களில் பாடல்களை நானே உருவாக்குவதற்குத்தான் பிடிக்கும், மற்ற பாடல்களைப் பயன்படுத்தி புதிய பாடல்களை உருவாக்குவது என்பது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மற்ற இயக்குநர்கள் ரீமேக் செய்த பாடல்களைக் கேட்பேன், பாடல்களை ரிமேக் செய்வது தவறு இல்லைதான். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை” என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருந்தார். இதுதான் குட் பேட் அக்லி படத்திலிருந்து விலகக் காரணமா எனக் கோலிவுட் வட்டாரங்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Follow Us