Kayadu Lohar : மாமனே உன்ன காணாம.. ரசிகர்களின் மனதைக் கவரும் நடிகை கயாடு லோஹரின் ரீல்ஸ் வீடியோ!
Kayadu Lohar Viral Instagram Reels : தமிழ் சினிமாவில் தான் நடித்த முதல் படத்தின் மூலம், ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் நடிகை கயாடு லோஹர். டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியான முதல் திரைப்படம் டிராகன் (Dragon). நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை பிரபல கோலிவுட் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் முன்னணி கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் நடித்துப் பிரபலமான இவருக்குத் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகரித்தனர். இதைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “மாமனே உன்ன காணாம” என்ற பாடலுக்கு, தாவணி அணிந்து கிராமத்துப் பெண் தோற்றத்தில் இருக்கும் அவரது வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழ் பெண்ணாகவே மாறியிருக்கும் அவரின் வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.




ரசிகர்களை கவரும் நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை கயாடு லோஹரின் வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்
கயாடு லோஹர் டிராகன் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அதர்வாவின் முன்னணி நடிப்பில் உருவாக்கும் இதயம் முரளி என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தினை தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் உருவாக்கி வருகிறார். மேலும் இதைத் தொடர்ந்து சிலம்பரசனின் STR49 திரைப்படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளும் கடந்த 2025, ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்றது. ஆனால் இந்தப் படமானது சில காரணங்களால் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து எந்தவித அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷுடன் புதிய படம் :
இந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும், இம்மார்ட்டல் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது ரொமாண்டிக் திரில்லர் திரைப்படமாக உருவாகிவருகிறது .
தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தமாகி சென்சேஷனல் நடிகையாக இருந்து வருகிறார். சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.