AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!

Suriya About Karuppu Story: தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருப்பார் சூர்யா. இவர் கருப்பு படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். அந்த வகையில் கருப்பு படத்தின் கதையை கேட்டு எவ்வாறு சம்மதித்தார் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சி குறித்து சூர்யா வியந்து பேசியிருந்தார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Suriya: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!
சூர்யா மற்றும் ஆர்ஜே பாலாஜிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 May 2026 16:54 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இதில் சூர்யா அதிரடி ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), ஷிவதா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு மற்றும் நட்டி நட்ராஜ் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த படமாக தயாராகியுள்ளது. இதில் சூர்யா வழக்கறிஞர் “சரவணனாக” நடித்துள்ளார்.

அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த கருப்பு பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, கருப்பு படத்தின் கதையில் நடிக்க சம்மதித்தது மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளர்.

இதையும் படிங்க: தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கு நிஜமான காரணம் இதுதான் – சுந்தர் சி ஓபன் டாக்

கருப்பு படத்தில் நடிக்க சம்மதித்தது பற்றி சூர்யா பகிர்ந்த விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது சூர்யா பேசுகையில், “ஆர்.ஜே.பாலாஜி சொன்னதுபோல, அந்த அறைக்குள் என்ன நடந்தது என தெரியவில்லை. எனக்கு தெரிந்து கருப்பசாமி இருந்தாருனு நினைக்கிறேன் அந்த ரூம் உள்ள. எங்க இருவரையும் இணைந்து பணியாற்ற வைத்தார், மேலும் கருப்பு பட கதைக்கு என்னை ஓகே சொல்ல வச்சாரு மற்றும் ஒன்றாக பயணிக்க வச்சாரு. நான் ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை பிரம்மிப்பாக பார்க்கிறேன். நான் ஒரு வாழ்க்கையில் என்னால் சூர்யாவாக மட்டுமே (நடிகராக) இருக்கமுடிகிறது.

இதையும் படிங்க: நான் தான் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவிருந்தேன்.. ஆனால் – இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!

ஆனால் ஆர்.ஜே.பாலாஜி நடிகராக, இயக்குநராக மற்றும் ஐபிஎல் கமெண்ட்ரியாக இருக்கமுடிகிறது. அவருக்கு பல்வேறுவிதமான திறமைகள் இருக்கு. கருப்பு கதையை கேட்டு ஒரு அரைமணிநேரத்தில் ஓகே சொல்லிட்டேன். ஆனால் மற்ற முக்கியமான இயக்குநர்களிடம் எதாவது ஒரு வாக்குவாதம் வைப்பேன். ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த எனர்ஜிக்கு, மற்றும் அந்த அறைக்குள் இருந்த எனர்ஜி என்னை ஓகே சொல்ல வைத்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

கருப்பு திரைப்படம் குறித்து சூர்யா வெளியிட எக்ஸ் பதிவு:

இந்த 2026ம் ஆண்டில் ஜன நாயகன் படத்திற்கு பிறகு, ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த படம்தான் கருப்பு. இப்படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இப்படம் நிச்சயமாகி சூர்யாவிற்கு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us