AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை பேசும் எக்ஸாம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Exam web series reivew here | அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இணையதள தொடர் எக்ஸாம். இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்கலாம்.

அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை பேசும் எக்ஸாம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
எக்ஸாம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 May 2026 09:00 AM IST

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையதள தொடர்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இணையதள தொடர் எக்ஸாம். இந்த தொடரை இயக்குநர் சற்குணன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இருவரும் இந்த எக்ஸாம் என்ற இணையதள தொடரை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த தொடர் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ் மொழியில் உருவான இந்த இணையதள தொடர் பான் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் காணக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த எக்ஸாம் இணையதள தொடரில் நடிகர்கள் அப்பாஸ், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் மூவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடர் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.

எக்ஸாம் வெப் சீரிஸின் கதை என்ன?

அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக வினாத்தாள்களை வெளியிடுவது, மேலும் பணம் அதிகமாக கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டு அவர்களின் தேர்வை மற்றவர்கள் வைத்து எழுதி பதவிகளை பெறுவது ஆகியவற்றை இந்த தொடரில் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.

Also Read… ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது – விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

மேலும் இந்த முறைகேடுகளால் நன்கு படித்து நேர்மையான முறையில் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட ஏழைப் பெண் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் தனக்கு ஏற்பட்ட அநீதி மட்டும் இன்றி தன்னைப் போன்ற மாணவர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த தொடரில் வெளிப்படுத்தி இருப்பார்.

மொத்தம் 7 எபிசோடுகளை கொண்ட இந்த இணையதள தொடரில் ஒவ்வொரு எபிசோடு கிட்டதட்ட 30 நிமிடங்களை கொண்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இந்த தொடர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றது. மேலும் இந்த தொடரை தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Also Read… 96 பட இயக்குநருடன் இணைந்த ஃபஹத் பாசில்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு – வைரலாக வீடியோ!

Follow Us