AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: புற்றுநோய் என்றால் என்ன..? உடலின் எந்தப் பகுதிகளில் ஏற்படும்..?

Cancer Disease: பெருங்குடல் புற்றுநோய் பெருங்குடல் மற்றும் மலக்குடலின் உட்புறப் புறணியில் ஏற்படுகிறது. இங்கு செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோய் புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகிறது. அதேநேரத்தில், கல்லீரல் புற்றுநோய் பொதுவாக கல்லீரல் செல்களில் தொடங்குகிறது. இப்படி ஒவ்வொரு புற்றுநோயும் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளது. 

Health Tips: புற்றுநோய் என்றால் என்ன..? உடலின் எந்தப் பகுதிகளில் ஏற்படும்..?
புற்றுநோய் பாதிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Feb 2026 15:49 PM IST

புற்றுநோய் (Cancer) என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் ஒரு நோயாகும். காலப்போக்கில், இந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை சேதப்படுத்த தொடங்கும். இந்த நோய் உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். அதேநேரத்தில், புற்றுநோய் சில உறுப்புகள் மற்றவற்றை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட உறுப்பில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு, அந்த உறுப்பில் உள்ள செல் சுழற்சி விகிதம், சுற்றுச்சூழல் காரணிகளின் விளைவுகள், மரபணு பண்புகள் (Genetic Traits) மற்றும் வயது தொடர்பான மாற்றங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, புற்றுநோயால் ஆண்களும் பெண்களும் வித்தியாசமாகப் பாதிக்கப்படுகின்றனர், மேலும் எந்த திசுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பதை தீர்மானிப்பதில் வயதும் பங்கு வகிக்கிறது.

ALSO READ: வாய் புற்றுநோய் என்றால் என்ன? சிகிச்சை முறை என்ன? விளக்கும் மருத்துவர் ராஜசுந்தரம்!

பொதுவான புற்றுநோய்கள் என்றால் என்ன..?

உலகளவில் 200க்கு மேற்பட்ட புற்றுநோய்கள் காணப்பட்டாலும், 6 வகையான புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவையாக பார்க்கப்படுகிறது. இவற்றில் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் ஆகியவை அடங்கும். நுரையீரல் புற்றுநோய் சுவாசக்குழாய் மற்றும் சிறிய காற்றுப்பாதைகளின் உள் புறணியில் உருவாகிறது. நீண்ட நாட்கள் புகைபிடிப்பதாலோ அல்லது மாசுபட்ட காற்றினாலோ இந்த நோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. மார்பகத்தின் குழாய்கள் மற்றும் சுரப்பிகளில் மார்பக புற்றுநோய் உருவாகிறது.

பெருங்குடல் புற்றுநோய் பெருங்குடல் மற்றும் மலக்குடலின் உட்புறப் புறணியில் ஏற்படுகிறது. இங்கு செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோய் புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகிறது. அதேநேரத்தில், கல்லீரல் புற்றுநோய் பொதுவாக கல்லீரல் செல்களில் தொடங்குகிறது. இப்படி ஒவ்வொரு புற்றுநோயும் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளது.

புற்றுநோய்க்கான காரணங்கள்:

செல் பிரிவை கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடையும்போது புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த சேதம் பிறக்கும்போதே இருக்கலாம். அப்படி இல்லையென்றால், காலப்போக்கில் உருவாகலாம். நீண்டகால தொற்றுகள், புகையிலை மற்றும் ரசாயனங்களை பயன்படுத்துதல், கதிர்வீச்சு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணிகள் அனைத்தும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன.

தடுப்பு மற்றும் ஆரம்பகால நோயறிதல்:

புகைபிடிப்பதை நிறுத்துதல், தேவையான தடுப்பூசிகளை எடுத்து கொள்ளுதல், சீரான உணவை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், மது அருந்துவதை நிறுத்துதல் அல்லது கட்டுப்படுத்துதல், மற்றும் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது ஆகியவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இமேஜிங் சோதனைகள், பயாப்ஸிகள் மற்றும் ஸ்கிரீனிங் திட்டங்கள் போன்ற ஆரம்பகால நோயறிதல், நோயை முன்கூட்டியே கண்டறிய உதவி செய்யும்.

ALSO READ: டயட், உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த தவறுகளே காரணம்!

புற்றுநோய்க்கான நவீன கால சிகிச்சை:

புற்றுநோய் சிகிச்சையானது கட்டியின் நிலை மற்றும் நோயாளியின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை புற்றுநோய்க்கான நவீன கால சிகிச்சை முறையாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் குணப்படுத்த முடியாத சூழ்நிலையில் நோய்த்தடுப்பு சிகிச்சை வலி மற்றும் துன்பத்தைக் குறைப்பதிலும் வாழ்க்கைத் தரத்தைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

Follow Us