AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடியில் வெளியாகி உள்ள இயக்குநர் ரத்ன குமாரின் 29 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Director Rathna Kumars 29 Movie OTT Review | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 29 படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியாகி உள்ள இயக்குநர் ரத்ன குமாரின் 29 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
29 படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2026 20:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருபவர் இயக்குநர் ரத்ன குமார். இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியான ஆடை, குலு குலு ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்கள் மட்டும் இன்றி பலப் படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றையும் எழுதி வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நபராக வலம் வரும் இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் 29.

இந்தப் படத்தில் நடிகர் விது நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மகேந்திரன், அவினாஷ், ஷெஹ்னாஸ் பாத்திமா, சிந்து ஷ்யாம், ஆதிரா பாண்டிலட்சுமி, சா. சதீஷ்குமார், பிரியங்கா ராய், அனுஸ்ரீவேலன், பிரேம் குமார், லியோனா லிஷோய் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள 29 படத்தின் கதை என்ன?

விவசாய குடும்பத்தை சேர்ந்த நாயகன் விது இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் அவரது அம்மா விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவரை அக்ரி படிக்க வைக்கிறார். அவர் படித்து முடித்த நேரத்தில் ஊரில் வரட்சி நிலவ சொந்த ஊரான சேலத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி செல்கிறார். அங்கு படித்த படிப்பிற்கு வேலை செய்யாமல் கிடைத்த வேலையை செய்துக்கொண்டு ஒரு மேன்சனில் வாழ்ந்து வருகிறார்.

Also Read… இன்று மாலை விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்

வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை தனக்கு என்று ஏற்படுத்திக்கொள்ள் நினைக்கும் இவருக்கு 29 வயது ஆகியும் எந்த ஒரு நிலையான அடையாளம் இல்லாமல் இருக்கிறது. இப்படி இருக்கும் நாயகன் விது வாழ்க்கையில் தேவையாக வருகிறார் நாயகி பிரீத்தி அஸ்ரானி. அவர்கள் இருவரும் பழகி பிறகு அது காதலாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து இவர்கல் இருவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ஜஸ்ட் காட் திங்க்ஸ்… ஓடிடியில் சூப்பர் ஹிட் அடிக்க வரும் கருப்பு – எங்கு எபோது பார்க்கலாம்

Follow Us