AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உடல் எடையைக் குறைத்த நடிகை நிவேதா தாமஸ்… வைரலாகும் போட்டோ

Nivetha Thomas Weight Loss Image | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

உடல் எடையைக் குறைத்த நடிகை நிவேதா தாமஸ்… வைரலாகும் போட்டோ
நிவேதா தாமஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2026 18:20 PM IST

தமிழ் சின்னத்திரையில் 90ஸ் கிட்ஸ்களிடையே அதிக அளவில் பிரபலமான சீரியல் மை டியர் பூதம். தற்போதும் 90ஸ் கிட்ஸ்கள் பேசும் போது ஸ்கூல் முடிச்ச உடனே வீட்டுக்கு வந்ததும் பாக்கும் சீரியல் மை டியர் பூதம் என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த மை டியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் தமிழ் மொழியில் பல சீரியல்களில் நடிகை நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்த நிலையில் மை டியர் பூதம் தான் அவரை அதிக அளவில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருகிறார்.

அதன்படி தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை நிவேதா தமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உடல் எடையைக் குறைத்த நடிகை நிவேதா தாமஸ்:

இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் 35 சின்ன கதா காடு. தெலுங்கு மொழியில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிகை நிவேதா தாமஸ் நடித்து இருந்தார். இவர் 35 வயது மிக்க பெண்ணாக நடித்ததால் உடல் எடையை அதிகரித்து இருந்தார். தொடர்ந்து அவரது எடையை பார்த்து ரசிகர்கள் என்ன இவ்வளவு எடை கூடிவிட்டார் என்று தெரிவித்து வந்தனர். இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகை நிவேதா தாமஸ் உட எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சின்னத்திரையில் ஏ.ஆர்.ரஹ்மான்.. இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பு – வைரலாகும் புரோமோ வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டேர் டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையா? வைரலாகும் தகவல்

Follow Us